Tuesday 16 June 2015

இந்தியாவில் உணவுத் தட்டுப்பாடும் வீணடிப்பும்!!

உலக அளவில் 9 பேரில் ஒருவருக்கு தேவையை விட குறைவான உணவு அளிக்கப்பட்டு வருவதாக ஐநாவின் சமீபத்திய அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

உலக அளவில் கடந்த 1990 ஆண்டுகளில் 79 கோடியாக இருந்த ஊட்டச்சத்து குறைபாடு அளவு தற்போது, 21 கோடியாக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இந்தியாவில் இதன் அளவு ஒன்றரை கோடி மட்டுமே குறைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் 15 சதவீத மக்கள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஐநா கூறியுள்ளது. இந்தியாவிற்கு அதிகப்படியாக ஊட்டச்சத்து குறைபாடு உள்ள நாடாக சீனா உள்ளது.

சிறு விவசாயிகள் பெரும்பாலானோர் தேவையான உணவு கிடைக்காமல் அவதிப்பட்டு வருவதாக விவசாய வளர்ச்சிக்கான ஐ.நா. சர்வதேச நிதி ஆணைய இயக்குனர் ஜோஸ்பினா ஸ்டப்ஸ் கூறியுள்ளார்.

அதே போல் ஊட்டச்சத்து குறைபாடுள்ளவர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கான இலக்கை எட்ட இந்தியா தவறிவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார். உலக அளவில் இந்தியாவில் மட்டும் தான் 20 கோடி மக்கள் பட்டினியால் வாடுவதாக ஐ.நா தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

1990 ஆம் ஆண்டுகளிலிருந்து 2002 ஆம் ஆண்டு வரை இந்தியாவை விட சீனாவில் அதிகமான மக்கள் பட்டினியாக இருந்ததாக கூறியுள்ள ஐ.நா அந்நாடு மேற்கொண்ட ஆக்கப்பூர்வமான நடவடிக்கையால் தற்போது 12 கோடி மக்கள் மட்டுமே அங்கு பட்டினியால் வாடுவதாக கூறியுள்ளது.

இதன் மூலம் சீனாவை காட்டிலும் இந்தியாவில் அதிகமானோர் பட்டினியால் வாடி வருவது தெளிவாக தெரிகிறது.

இந்த லட்சனத்தில் இந்திய உணவு கழகத்தின் கிடங்குகளில் 5 ஆண்டில் 56,000 டன் தானியம் வீண்

உணவு தானியங்களில் விலை அதிகரித்து வரும் நிலையில், நாடு முழுவதும் இந்திய உணவுக் கழகமான Food Corporation of Indiaவின் கிடங்குகளில் கடந்த 5 ஆண்டுகளில் 56 ஆயிரம் டன் தானியங்கள் வீணாகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு உணவுக் கழகம் அளித்த பதிலில் எவ்வளவு தானியங்கள் வீணாகின என்ற விவரம் தெரிய வந்துள்ளது. இதில் கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் கிடங்குகளில் 40 ஆயிரம் டன் தானியங்கள் வீணாகியுள்ளன.

2010ம் ஆண்டில் வீணான தானியங்கள் 6 ஆயிரத்து 350 டன்களாக இருந்த நிலையில், கடந்த 5 ஆண்டுகளில் இது பல மடங்கு அதிகரித்துள்ளது. வீணான மொத்த தானியங்களில் 27 ஆயிரம் டன் அரிசியும், 26 ஆயிரம் டன் கோதுமையும் அடங்கும்.

எனினும், போதிய இடவசதி, பாதுகாப்பு, கையாளல் ஆகியவை மட்டுமே இழப்புக்கு காரணமல்ல என்றும் உணவுக் கழகத் தரப்பில் கூறப்படுகிறது. அதேபோல, 56 ஆயிரம் டன் உணவு தானிய வீணடிப்பால் எவ்வளவு தொகை இழப்பு ஏற்பட்டது என்ற விவரத்தை அது அளிக்கவில்லை.

No comments: