Monday 8 June 2015

"டாக்டர்" பெருந்தலைவர்...


பதவியை பயன்படுத்தி படிக்காத பட்டங்களை பெருமைக்காக போட்டுக் கொள்ளும், வாங்கிக் கொள்ளும் அரசியல்வாதிகளைப் பார்க்கிறோம்...

பதவியை பயன்படுத்தி தேர்வு எழுதுவதில் தில்லுமுல்லு செய்த அண்டை மாநில அமைச்சர்களைக் கூட பார்த்திருக்கிறோம்...

மக்கள் குடுத்த பட்டமென்று தங்கள் தகுதிக்கு ஒவ்வாத பட்டங்களை தாங்களே தங்கள் பெயருக்கு முன்னால் போட்டுக் கொள்ளும் அரசியல் தலைவர்களையும் நமக்குத் தெரியும்...

ஆனால் நாடே நன்றிக் கடன் பட்டு வாழ்த்திய தன் சாதனைக்காக தனக்கு அளிக்கப் படவிருந்த பட்டத்தை வேண்டாம் என்று மறுத்த உத்தமரை நாம் நம் வாழ்நாளில் இனி காண்போமா என்ன???

வேறு எந்த மாநிலமும் செய்யாத கல்விப் புரட்சியை தமிழகத்தில் முதல்வராக இருந்த காமராஜர் செய்ததால், நாடு முழுவதும் அவரது புகழ் பரவியிருந்தது. குஜராத் பல்கலைக்கழக பேரவை கூடி, கல்விப் புரட்சி செய்த காமராஜருக்கு டாக்டர் பட்டம் தர முடிவு செய்தது.இதை தெரிவிப்பதற்காக, பல்கலைக்கழகத்தின் பிரதிநிதிகள் காமராஜரை சந்தித்தனர். அவர்களிடம் காமராஜர் பேசும் போது, "டாக்டர் பட்டமா... எனக்கா... நான் என்ன பெரிய சாதனை செஞ்சுட்டேன்னு இந்த முடிவை எடுத்தீங்க... எனக்கு டாக்டர் பட்டமெல்லாம் வேண்டாம். நாட்டில் எத்தனையோ மேதாவிகள், விஞ்ஞானிகள் இருக்காங்க... அவங்களை தேடிப்பிடிச்சு, இந்தப் பட்டத்தை கொடுங்க. எனக்கு டாக்டர் பட்டம் கொடுப்பதை, நான் ஒத்துக்க மாட்டேன்' என்று சொல்லி திருப்பி அனுப்பி விட்டார்.ஹூம்... அது அந்த காலம்!

No comments: