Wednesday 10 June 2015

கண் குடுத்த கடவுள்!


இவரளவுக்கு இவருக்கு முன்னரோ பின்னரோ பிள்ளைகளின் கல்வியைப் பற்றி சிந்தித்திருக்க வாய்ப்பும் இல்லை, சிந்திக்கப் போவதும் இல்லை! கல்விக் கண் திறந்தவர் என்று சுலுவில் கூறிவிடுகிறோம்...
ஆனால் அதற்கு எங்கள் ஐயன் பட்ட பாடு என்ன கொஞ்ச நஞ்சமா??
ஏழை மக்களின் கல்வி குறித்த ஐயனின் சிந்தனைகள் இதோ...

”ஏழைகளுக்குச் சாப்பாடு போட்டால் அவன் பரம்பரையாகச் சாப்பிட்டானா என்று கேட்பது நியாயமா? ஏழைகளின் குழந்தைகளை வாட விடுவது முறையா? அவர்களைப் படிக்க வைத்தால் தானே முன்னுக்கு வருவார்கள். பணக்காரப் பையன்கள் படிக்கவா நான் முதல் மந்திரியாக இருந்து ராஜாங்கம் நடத்தறேன்?”

”பள்ளிக்கூடங்களைத் திறப்பது பெரிய காரியமில்லை. குழந்தைகளுக்கு நல்ல கல்வி அறிவை ஊட்டித் திறமைசாலிகளாக்க வேண்டும். அதற்குத தகுந்த ஆசிரியர்கள் பொறுப்புடன் நல்ல முறையில் கல்வி புகட்டினால் குழந்தைகளின் அறவு வளரும் பெற்றோர்கள் ஆசிரியர்களை நம்பித் தான் குழந்தைகளை அனுப்புகிறார்கள். ஆசிரியர்களைப் பற்றி சிந்திக்காமல் இருப்பது ஆபத்து!"


” மாணவர்கள் அரசியலில் ஈடுபட வேண்டியதில்லை. அரசியல் தான் நாட்டின் லட்சியத்திற்கு அஸ்திவாரம் எனவே மாணவர்கள் அதைப் பற்றி நன்கு தெரிந்து செய்ய வேண்டும். மாணவர்களைக் கொண்டு அரசியல் பலம் பெற நான் விரும்பவில்லை. நாங்கள் மாணவர்களை அரசியலுக்குப் பயன்படுத்துவோம் என்ற சந்தேகம் யாருக்கும் வேண்டாம்.”

”நம் சுகத்தைப் பற்றி நமக்குக் கவலை இல்லை. நாம் குழந்தைகளைப்ப பற்றிபக் கவலைப்படவேண்டும். குழந்தைகள் நல்வாழ்வு வாழ வேண்டும். குழந்தைகளுக்கு நிறையப் பள்ளிக் கூடங்கள் ஏற்படுத்தியிருக்கிறோம். மதிய உணவு வழங்குகிறோம். அணியும் (சீருடை) கொடுக்கிறோம்.”
”மாணவர்கள் கல்வி கற்பது வெறும் அறிவு வளர்ச்சிக்காக மட்டும் பயன்படாமல் நாட்டு முன்னேற்றத்துக்கும் பெரிதும் உதவுகிறது. பல்வேறு விஞ்ஞான தொழில் நுணுக்க நிபுணர்கள் மாணவர்களிடமிருந்து தோன்றி அபிவிருத்தி வேலைகளுக்குப் பயன்பட்டு வருகின்றனர்”


"எனினும் நமது வளர்ச்சிக்கு, வேகத்துக்கு அது போதுமானதாக இல்லை. எத்தனையோ பற்றாக்குறைகளைப் போலவே, நிபுணர்கள் பற்றாக்குறையும் உள்ளது. மாணவர்கள் நன்கு கற்று, விஞ்ஞான தொழில்நுட்ப மேதைகளாகி நாட்டுக்குப் பாடுபட வேண்டும்.”

”நம் தாய்மார்கள் படித்துவிட்டால், நாட்டிலுள்ள தொந்தரவுகள் நீங்கி விடும். நாம் சம்பாதித்த சுதந்திரமும் நல்ல முறையில் பாதுகாக்கப்படும்.”

"கல்வி நாட்டிற்கு அவசியம் தேவை. ஆனால், கற்றவர், கல்லாதவர் என்று ஒரு புது சாதி உண்டாகிவிடக்கூடாது.”

”நாமெல்லோரும் பெரியவர்களாகி விட்டோம். நமக்குப் படிப்பு வராது. நம்முடைய குழந்தைகளாவது படிக்கட்டும். அவர்களுக்காவது எது நியாயம், எது அநியாயம் என்று தெரியட்டும். அதற்காகத் தான் நாங்கள் நிறையப் பள்ளிக் கூடங்களைத் திறக்கிறோம். எல்லோரும் படிக்க வசதி செய்து கொண்டு இருக்கிறோம்."

ஆனால் ஐயா சிந்தித்த படியும் செயல்படுத்திய விதத்திலுமா கல்வி இன்று இருக்கிறது? கல்வியை தொழிலாக்கி, கலைமகளை விலைமகளாக்கி விட்டனரே இன்றைய கல்வித் தந்தைகள்!!


No comments: