Wednesday 18 February 2015

நெஞ்சை பிளந்த செய்திகள் 2

புலிகளை வேட்டையாடும் மிருகங்கள்

கடந்த 5 நாட்களாய் தேடப்பட்டு வந்த ஆட்கொல்லி புலி கொல்லப்பட்டு விட்டதாக இன்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட அதிரடிப்படை அறிவித்துள்ளது. புலிகள் ஏன் ஆட்கொல்லிகளாக மாறுகின்றன புலிகளுக்கும் மனிதனுக்கும் ஏதும் பூர்வ ஜெண்ம பகை உள்ளதா இல்லை மனிதனின் ருசி புலிக்கு மிகவும் விருப்பமாக உள்ளதா என்றால்....

இல்லை என்பதே பதில்!!





தனக்கு தானே சூனியம் வைத்துக் கொள்ளுதல் என்பது போல்தான் புலிக்கு ஆட்கொல்லியாக மாறுவது. புலிகளுக்கு மனித மாமிசம் அறவே பிடிக்காது. அவை மனித மாமிசத்தை விரும்புவதில்லை!! (கிடைச்சதெல்லாம் திங்கிற மனிதனின் நாற்றம் பிடிச்ச மாமிசம் எந்த மிருகத்துக்குமே பிடிக்காது!!) ஏன் எதற்கு என்று ஆராயும் முன்பு நம் இந்திய காடுகளில் வாழும் புலிகளின் இயல்பை பார்ப்போம்!!





புலிகள் இந்தியாவில் வாழும் நிலப்பரப்புகள் பொதுவாக புல்வெளிகள், துணை வெப்பமண்டல மற்றும் வெப்பமண்டல மழைக்காடுகள், புதர்க்காடுகள், ஈரப்பத மற்றும் வறண்ட இலையுதிர்க்காடுகள் மற்றும் சதுப்புநிலங்கள் ஆகும். பொதுவாகக் காடுகளில் உள்ள ஆண்புலிகளின் எடை 205 முதல் 227 கி.கி ஆகவும், பெண்புலிகளின் சராசரி எடை 141 கி.கி வரையிலும் இருக்கும். இருப்பினும், வட இந்தியப் புலிகளும் வங்கப்புலிகளும் இந்தியத் துணைக்கண்டத்தின் தென்பகுதிகளில் காணப்படுபவற்றை விடச் சற்று கொழுத்தவையாக உள்ளன. இந்த ஆண் புலிகள் சராசரியாக 235 கிலோ எடை கொண்டவையாக உள்ளன. தலை முதல் உடல் வரை 7 அடி நீளம் கொண்டவையாக இருக்கும் (வால் சேர்க்காமல்).  சராசரியாக இவற்றின் மாமிச தேவை ஒரு நாள் ஒன்றுக்கு 5 கிலோ! குட்டிகள் இருந்தால் இரண்டு மடங்காகும்!!




 வட இந்தியாவில் பொதுவாக இவற்றின் உணவுகள் சாம்பார் இன மான்கள், மயில்கள், காட்டு பன்றிகள் சில வேளைகளில் குரங்குகள் கூட. ஆனால் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் வாழும் புலிகள் சிறிய குரங்குகள் முதல், காட்டு பன்றிகள், புள்ளி மான்கள் வரை வேட்டையாடி உண்டாலும் இவற்றின் பிறிய உணவானது கௌர் எனப்படும் இந்தியன் பைசன் ஆகும்! இந்த கௌரின் எடை 650 கிலோ முதல் 1.5 டன் வரை ஆகும். இவை 7.5 அடி உயரம் வரை வளரக் கூடியவை. அதே போல் உணவு கிடைக்காத வேலையில் முள்ளம் பன்றி சிறு முயல் போன்றவற்றையும் உன்ணும். யானை குட்டிகளை வேட்டையாடி தின்ற புலிகளும் உண்டு!!










சராசரியாக 20 வேட்டை முயற்சியில் ஒன்று மட்டுமே புலிகளுக்கு வெற்றி குடுக்கின்றன!! ஒரு ஆண் புலிக்கு 60ல் இருந்து 100 சதுர கி.மீ வரை எல்லை இருக்கும். அந்த எல்லைக்குள் வேறு எந்த புலியையும் நடமாட விடாது. எல்லைகள் விசயத்தில் புலிகள் மிகவும் கண்டிப்பானவை! அவற்றின் எல்லையில் மற்றொரு புலியை மட்டுமல்ல சிறுத்தை, ஓநாய், காட்டு நாய் போன்ற எந்த போட்டியையுமே அவை விரும்புவதில்லை!!  எல்லை பிரச்சினையில் பெரும்பாலும் மோதல் வராது. ஏனென்றால் மோதினால் உயிர் பலியோ அல்லது கடுமையான காயமோ ஏற்படலாம். கடுமையான காயம் புலிகளுக்கு உடனடி மரனத்தை விட கொடுமையான மெல்ல சாகும் தன்டனையை குடுத்து விடும். ஆதலால் பலவீனமான புலி எதிர்த்து சன்டை போடாமல் தன் எல்லையை சுருக்கிக் கொண்டே செல்லும். எல்லை சுருங்கும் போது, அதற்கு வேட்டையாட விலங்குகள் சுருங்கும். அதனால் அவை மனிதர்களிடம் இருக்கும் மாடு ஆடு இல்லையானால் மனிதர் பக்கம் திரும்புவது!! இது போக அவைகளின் உணவு விலங்குகளை மனிதன் வேட்டையாடி விடுவது, அவைகள் வாழும் பரப்பளவை கணிசமாக சுறுக்கி விடுவது. எல்லை பிரச்சினையிலோ அல்லது வேட்டையிலோ காயப்பட்டு வேட்டையாட முடியாமல் போவது ஆகியவைதான் அவற்றை மனிதன் பக்கம் திருப்புகிறது!! புலிகளின் வாழ்வாதாரத்தில் எல்லா வகைகளிலுமே மனிதன் சுயநலத்தோடு போட்டி போடுகிறான்!!






அவற்றின் வாழுமிடத்தில் மனிதன் எஸ்டேட், ரிசார்ட், அணைக்கட்டுகள், ரோடு என சுயநலத்தோடு ஆக்கிரமிக்கிறான். அது போக அவற்றின் உணவுகளை மாமிசத்துக்காக வேட்டையாடுவது அதை விட கேவலமானது. இதை செய்வது பெரும்பாலும் ஆளும் வர்கங்களே, அவர்களுக்கு உதவுவதும் வணபாதுகாவலர்களே. அதே போல் ஒரு ஆண் புலி வேட்டையாடுவதற்கு மழைக்காலத்தில் 100 சதுர கி.மீ நிலப்பரப்பும், வெயில காலத்தில் 200 சதுர கி.மீ நிலப் பரப்பும் தேவைப்படிகின்றன. மேற்படி புலி கொல்லப்பட்ட முதுமலை சரணாலயத்தில் 80 புலிகள் இருப்பதாக புள்ளி விபரம். அத்தனை புலிகள் வாழ எத்தனை சதுர கி.மீ இடம் தேவை என கணக்கிட்டுக் கொள்ளுங்கள். ஆனால் இங்கு முதுமலை புலிகள் சரணாலயத்தின் மொத்த நிலப்பரப்பே 321 சதுர கி.மீ தான்!! அதிலும் மக்கள் ஆக்கிரமிப்பு. 





ஒரு காடு ஆரோக்கியமாக உள்ளது என்பதன் ஆதாரமே புலிகளின் ஆரோக்கியம்தான். அவை பாதிக்கப்படும் போது மொத்த இயற்கை சுற்றுச்சூழலே பாதிப்புக்குள்ளாகின்றன என அர்த்தம். அதாவது ஆறு, குளம் கண்மாய் அழிப்பு போல காடு அழிப்பிலும் மனிதன் தனக்கு தானே சூனியம் வைத்துக் கொள்கிறான் என்றுதான் அர்த்தம். இங்கு சுட்டுக் கொல்லவேண்டியதும், தன்டனைக்குள்ளாக வேண்டியதும் புலிகள் அல்ல என்னை போல கேடு கெட்ட சுயநல மனித ஜென்மங்களே!! 80 புலிகள் வாழுமிடத்தில் இந்த புலிதான் ஆட்கொல்லி என இவர்கள் சரியாக அடையாளம் கண்டார்களா என தெரியவில்லை. புலி கன்ணி வைத்து கொடூரமான முறையில் பிடிபட்டது போல் படத்தில் தெரிகிறது! வயிறு பிளந்து தையல் இடப்பட்டுள்ளது!! இதே போல் கடந்துஆண்டு சனவரி கடைசியிலும் நீலகிரியில் முதுமலையை சேர்ந்த புலி ஒன்று சுட்டுக் கொல்லப்பட்டது!!

ஆதாரங்கள்: 

http://www.dhinasari.com/latest-news/%E0%AE%89%E0%AE%A4%E0%AE%95%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2-002493.html



http://www.maalaimalar.com/2014/01/24012506/Shoot-and-killed-the-tiger-bod.html

No comments: