Saturday 21 February 2015

பெருந்தலைவர்- பட்டம் துறந்த முனிவர்

குஜராத் பல்கலைக் கழகம் தனது பேரவையைக் கூட்டி, இந்தியாவிலேயே எந்த மாநில அரசும் நினைத்து பாராத அளவில் கல்வித் துறையில் செயற்கரிய சாதனைகள் செய்தமைக்காக "டாக்டர்" பட்டம் தர தீர்மாணம் போட்டு காமராஜை தேடி வந்தார்கள். 



வந்தவர்களிடம் காமராஜ் என்ன சொன்னார் தெரியுமா?

" டாக்டர் பட்டமா? எனக்கா? நான் என்ன பெரிய சாதனை செஞ்சுட்டேன்னு இந்த முடிவெடுத்தீங்க. அதெல்லாம் வேண்டாம்... நாட்டில் எத்தனையோ விஞ்ஞானிகள், மேதாவிகள் இருக்கிறாங்க... அவுங்களை தேடிப்புடுச்சு இந்த பட்டத்தை குடுங்க. எனக்கு வேண்டாம்... நான் ஒத்துக்கொள்ளவே மாட்டேன்... போய்வாங்க" என்று சொல்லி அனுப்பிவிட்டார்.

டாக்டர். ஐன்ஸ்டீன் மகாத்மா மறைவின் போது விடுத்த செய்தி- " இப்படிப்பட்ட ஒரு மாமனிதர் இந்த நிலவுலகத்தில் ஊனோடும் உதிரத்தோடும் உலவினார் என்பதை வருங்காலச் சந்ததியினர் நம்பவே மறுப்பர்".

காமராஜரை பற்றி முற்றிலும் அறிந்தவர்களின் மனநிலையும் இதுவாகத்தான் இருக்கும்.

No comments: