Wednesday 11 February 2015

பிழைக்கத் தெரியாத இணைகள்-கக்கன்-காமராசர்

கக்கன் மீது காமராசர் கொண்ட அன்பு அலாதியானது. அதே போலத்தான் கக்கனும் கடைசி வரை காமராசரின் விசுவாசிகள் லிஸ்டில் இருந்தார். முதல் சந்திப்பில் பெரியவர் எனக்கு ஓர் ஊழியராகத்தான் தோன்றினார். ஆனால், இன்று பாரதம் போற்றும் உயர்ந்த தலைவர்களில் ஒருவராக நான் அவரை மதித்துப் போற்றுகிறேன். ஆனால் பெரியவரோ, அன்றும் சரி   இன்றும் சரி, என்னைத் தமது சகாவாகவே நினைத்துக்கொண்டு இருக்கிறார். எங்களிடையே ஏற்பட்ட முதல் சந்திப்பு, சாதாரணமானதாக இருந்தாலும், எங்கள் இருவருக்கும் இடையில் ஏற்பட்டுள்ள பாசமும், மன நெருக்கமும் அசாதாரணமானதாகும். இனி, எத்தனை பிறவி எடுத்தாலும் இது தொடர்ந்து வர வேண்டும் என்றுதான் நான் பிரார்த்திக்கிறேன்!”எனக் கக்கன்  குறிப்பிட்டிருந்தார்.



இளமை முதலே எந்த துயரையும் ஏற்றுக்கொண்ட கக்கனுக்கு காமராசர் இறந்ததைத் தாங்கமுடியவில்லை. காமராசர் இறந்தவேளையில்  கக்கன் உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்தார். அப்போது அவரால் எழுந்து நடக்கமுடியாத நிலை. அவரது தம்பி விஸ்வநாதனை அழைத்து காமராசருக்கு அஞ்சலி செலுத்த விரும்புவதைச் சொன்னார். அவரும் அண்ணனை காமராசர் இல்லம் கூட்டிச் சென்றார். அங்கிருந்து காமராசரின் உடல் ராஜாஜி மண்டபம் எடுத்துச் செல்லப்பட்டதாக அறிந்து அங்கு சென்றார்கள். காமராசர் உடலுக்குச் சற்றுத் தொலைவில் கக்கனுக்கு ஒரு நாற்காலி போடப்பட்டது. கதறி அழுதார் கக்கன். தலைவரின் இறுதி ஊர்வலத்திலும் போகவேண்டும் என கக்கன் விரும்பினார். விஸ்வநாதனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.




 அந்த நேரத்தில் அங்கு காமராசருக்கு அஞ்சலி செலுத்த முதல்வராக இருந்த கருணாநிதியும், பிரதமர் இந்திராகாந்தியும் தனித்தனிக் காரில் வந்தார்கள். கக்கனை பார்த்து கருணாநிதி வணக்கம் தெரிவித்தார். பின்னர் இந்திராகாந்தி அஞ்சலி செலுத்தியவுடன் இறுதி ஊர்வலம் துவங்க ஏற்பாடாகியது. கருணாநிதியை தனது காரில் வருமாறு இந்திராகாந்தி அழைக்க காரில் ஏறினார் கலைஞர். அப்போது தனது காரின் டிரைவரைக் கூப்பிட்டு " கக்கனை நம்ம காரில் கூட்டிட்டு வா.." என்றார். கக்கன் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்க கருணாநிதி வாய்ப்பேற்படுத்திக் கொடுத்ததை கக்கனின் உறவினர்கள் நினைவுகூர்கிறார்கள்.


கண்ணதாசன், கக்கன் என பெருந்தலைவரை சுற்றி இருந்தவர்களும் வெள்ளந்தியாகவே இருந்துள்ளனர். கண்ணதாசனும் கக்கனும் பெருந்தலைவர் மீது கொண்ட விசுவாசம் எல்லாவற்றையும் கடந்தது. அதே போல் இவர்கள் இருவர் மீதும் பெருந்தலைவர் கொண்டிருந்த அன்பும் அளவிட முடியாதது.

No comments: