Monday 16 February 2015

பெருந்தலைவர் - பெரும் தலைவர்

தமிழகத்தில் ஆறுகளுக்கு பஞ்சமில்லை. சேர நாடும், எறுமை நாடும் (கன்னட நாடும்) தமிழ் நாடாக இருந்த பழங்காலத்திலேயே காவேரி, தென்பெண்ணை, பாலாறு, வைகை, பொருணை நதி என ஆறு பல ஓடியது. தமிழகத்தில் முதன் முதலில் அதற்கான் தொழில்நுட்பமே உலகம் அறியாத காலத்தில் அணை கட்டியவர் கரிகாலன்!

அதன் பின் 1932-ல் பைகரா, அடுத்து 1937-ல் மேட்டுர், 1946-ல் பாபநாசம் நீர்மின் திட்டங்கள் செயற்படுத்தப்பட்டன.1952-ல் ராஜாஜி, சி.எஸ்,தேஷ்முக் முயற்சியில் கனடா நாட்டு உதவியால் நீலகிரி-குந்தா அணை பெறப்பட்டது.

அதனை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள அனைத்து அணைகளும் கட்டப்பட்டவை காமராஜரின் ஆட்சிக்காலத்தில் தான். மறக்க(டிக்க)ப்பட்ட அந்த நெடிய் பட்டிட்யலை பாருங்கள்.

1. ரூ 5 கோடியில் மலம்புழா அணை - 46,000 ஏக்கர் பாசன வசதி
2. தாமிரபரணி குறுக்கே மணிமுத்தாறு அணை - 20,000 கூடுதல் பாசன வசதி
3. ரூ 3 கோடியில் அமராவதி அணை - 47,000 ஏக்கர் பாசன வசதி
4. ரூ 2.5 கோடியில் சாத்தனூர் அணை - 20,000 ஏக்கர் பாசன வசதி
5. ரூ 2.5 கோடியில் வைகை அணை - 20,000 ஏக்கர் பாசன வசதி
6. ரூ 1 கோடியில் வாலையார் அணை - 6,500 ஏக்கர் பாசன வசதி
7. ரூ 50 லட்சத்தில் மங்கலம் அணை - 6,000 ஏக்கர் பாசன வசதி
8. ரூ 1 கோடியில் ஆரணியாறு அணை - 1,100 ஏக்கர் பாசன வசதி
9. ரூ 2 கோடியில் கிருஷ்ணகிரி அணை - 7,500 ஏக்கர் பாசன வசதி
10. வீடுர் அணை.
11. (*) பரம்பிக்குளம் - ஆழியாறு அணைகள்.
12. ரூ 2.5 கோடியில் மேட்டூர் பாசன கால்வாய் - 45,000 ஏக்கர் பாசன வசதி
13. ரூ 30 லட்சத்தில் புதுபிக்கப்பட்ட காவிரி டெல்டா கால்வாய்கள்
14. ரூ 10 கோடியில் கீழ் பவானி திட்டம் - 2,00,000 ஏக்கர் பாசன வசதி
15. ரூ 1.5 கோடியில் மேல் கட்டளை கால்வாய் திட்டம் - 36,000 ஏக்கர் பாசன வசதி
16. ரூ 1.5 கோடியில் புள்ளம்பாடி திட்டம் - 22,000 ஏக்கர் பாசன வசதி
17. ரூ 1.5 கோடியில் மீனக்கரை ஏரித்திட்டம் - 4,000 ஏக்கர் பாசன வசதி
18. ரூ 75 லட்சத்தில் மணிமுக்தா நதித்திட்டம் - 4,000 ஏக்கர் பாசன வசதி
19. ரூ 75 லட்சத்தில் கோமுகி ஆற்றுத்திட்டம் - 8,000 ஏக்கர் பாசன வசதி
20. ரூ 75 லட்சத்தில் தோப்பியார் ஏரி - 2,500 ஏக்கர் பாசன வசதி

மிகப் பெரிய புரட்சியை ஏற்படுத்திவிட்டு விளம்பரமே இல்லாமல் மறைந்தவர் பெருந்தலைவர்!

No comments: