Friday 13 February 2015

தப்பெல்லாம் தப்பே இல்லை

நான் படத்தில் ஆஷ்மின் அவர்களின் யதார்த்த வரிகள். வரிகளை கேட்க முடியாத அளவுக்கு இசை அமைத்திருப்பார் விஜய் ஆண்டனி. இ்ன்றைய வாழ்வியலோடு மிகவும் ஒத்துப்போகும் பாடல்!
Survival of the Fittest. This song shows how to be Fittest!
தக்கென பிழைத்து வாழ்தல்! அதற்கான தகுதியை உருவாக்கும் பாடல்!
பாடல் வரிகள்:
பாம்பில் விஷம் உள்ளதென்று
தூரம் தள்ளி அஞ்சி நிற்பான்
பாவம் அந்த ஆடுகளை உலையில் வைப்பான்
நியாயங்களை பேசும் போது
கோழை என தள்ளி வைப்பான்
கையில் கத்தி உள்ளவனை தலைவன் என்பான்
எப்போது பொய்கள் நீ சொல்வாயோ
அப்போது உன்னைப் போல் உலகில் யார் என்பார்
எப்போது உண்மைகள் நீ சொல்வாயோ
அப்போது உன்னைப் போல் ஏமாளி யார் என்பார்
வாழ்க்கை ஒரு போராட்டம் தான்
வாழ்வே ஒரு வியாபாரம் தான்
கீழே நீயும் வீழ்ந்து விட்டால் புல்லும் சிரிக்கும்
போகும் திசை யாவும் உன்னை
போடா என்று சொல்லி சொல்லி
ஏமாற்றங்கள் நாளும் உன் நெஞ்சை கிழிக்கும்
பூமி தான் காசுக்கு வாலாட்டும்
பொய்களை தாலாட்டும் உண்மைக்கு தீ மூட்டும்
ஏக்கங்கள் இன்றோடு போகட்டும்
சந்தோஷம் கூடட்டும் சாபங்கள் ஓடட்டும்

No comments: