Friday 13 February 2015

ராமராஜ்யம் என்றால் என்ன ?

படித்ததில் தெளிந்தது
ராமனின் ஆட்சி நடந்ததாக எழுதப்பட்டுள்ள வால்மீகி ராமாயணத்தில் ஒரு காட்சி...
ஒரு பார்பனன் இறந்துபோன தன் பிள்ளையை தூக்கிக்கொண்டு வந்து அரசவையில் கூறுகிறான்...
ராமா... இதோ பார்ப்பனக்குடியிருப்பில் ஒரு பிள்ளை இறந்து போய்விட்டது...
உன் கேடு கெட்ட ஆட்சியின் காரணமாக, உன் பொறுப்பின்மை காரணமாக என் குழந்தை இறந்து போய்விட்டது....
அவனவன் குல தர்மத்தை மீறி உன் ஆட்சியில் சமூகத்தின் ஒழுக்கத்தையும், நீதியயும் குலைக்கின்றனர்.
போய் பார் சம்பூகன் எனும் சூத்திரன் தாழ்ந்த சாதியைசேர்ந்தவனெல்லாம் பார்பன தர்மமான தவமிருத்தலைச்செய்கின்றான்..
இது தொடர்ந்தால் உன் அரசு அழியும், மக்கள் நோயால் துன்புறுவர்,பொல்லாச்சாபத்துக்கு ஆட்படுவாய் எனக்கூறி அழுகின்றான்.....
ராமன் பதட்டமடைகின்றான் ,கோவப்படுகிறான் எனது ஆட்சியிலொருவன் குல தர்மத்தை மீறி தவம் செய்வதா , சம்பூகனைப் போலவே எல்லா சூத்திரர்களும் இதைத் தொடங்கினால் தர்மம் என்னாவது ??
தேரினை எடுத்துக் கொண்டு புயலெனக் கிளம்பினான்.
காட்டில் சம்பூகன் கண்களை மூடி தியானித்திருக்கிறான்... முக்தியையோ, ஞானத்தையோ பெற....
ராமன் சம்பூகனைப் பார்த்தான் தன் மனுதர்ம ஆட்சியை குலைக்க வந்த கிளர்ச்சிக்காரனை பார்த்தான் , அவனை எழுப்பி விசாரிக்கவெல்லாம் நேரமில்லை தர்மம் சீட்டுக்கட்டு போல சரிந்து கொண்டே வருகிறது விசாரணையாவது ஒன்றாவது...கோபம் கொப்பளிக்க தன் வாளை உருவினான் ஒரே வெட்டு....
தலை துண்டாக விழுந்து சுற்றியது, சம்பூகனின் ரத்தம் பீய்ச்சி அடித்து தரையை நனைத்தது....
மீண்டுமொருமுறை தர்மம் காக்கப்பட்டது..
தர்மத்தை மீறுபவர்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டது.
யாராவது ராமராஜ்யம் அமைப்போம் எனச்சொன்னால் ,சம்பூகன்களின் ரத்தம் மீண்டும் ஒருமுறை மண்ணில் ஓடவேண்டுமா என எண்ணிப்பாருங்கள்.....
பதிந்தவர்: எள்ளன் எழுகதிர்



நீதி
இதுதான் ஆரிய தர்மம் ஆரிய வாழ்வு முறை. அறம் தமிழனின் வாழ்வு முறை. தமிழ் மறை திருக்குறள். தமிழன் ஒவ்வொருவருக்கும் தனக்கென ஒரு திருக்குறள் புத்தகம் தேவை.அறத்துப்பாலை தினம் ஒரு அதிகாரம் என திரும்பத் திரும்ப பாராயணம் செய்யுங்கள். அப்போதுதான் தமிழ்ப பண்பு புத்துயிர் பெறும். இதை படிக்கும் அனைவரும் தங்கள் நண்பர்களுடன் பகிருங்கள். 
நீதி போதித்தவர்: Hv விச்சு

No comments: