Sunday 15 February 2015

பெருந்தலைவர் - ஏழைப் பங்காளன்

கடைக்கோடித் தமிழனும் கரம் கூப்பித் தொழுத கர்மவீரராக, அப்பழுக்கற்ற அரசியல் தலைவராக, தேசத்தின் முன்னேற்றமே தன் வாழ்வாகக் கொண்ட தீயாக சீலராகக் காமராஜர் திகழ்ந்தார். “ஏழைகளின் துன்பம் போக்காமல் எந்தப் பதவியிலும் இருப்பதில் எவ்விதப் பயனுமில்லை” என்பதைத் தன் கொள்கையாகக் கொண்டிருந்த காமராஜர் உண்மையிலேயே ஒரு ஏழைப் பங்காளனாகத் தமிழக மக்களின் மனங்களில் நீங்காது நிறைந்தார்.



பணக்காரன் சாப்பிடற பொருள்: 
ஒருநாள் காமராஜர் அறையில் இருந்த போது, மதுரைக்காரர் ஒருவர் அவரை பார்க்க வந்தார். வந்தவர் ஒரு தாம்பாள தட்டு நிறைய ஆப்பிள் பழத்தையும், அதன் மேல் வெற்றிலை பாக்கும் ஒரு கல்யாண பத்திரிகையையும் வைத்து நீட்டினார். 

பத்திரிகையை எடுத்துக்கொண்ட காமராஜர் "ஏய்யா இவ்வளவு ஆப்பிள் வாங்கி வந்தே... இதெல்லாம் பணக்காரன் சாப்பிடற பொருள்யா... ஒரு ஆப்பிளுக்கு நாலு எலுமிச்சம் பழம்ன்னாலும் இதுக்கு ஐம்பது எலுமிச்சை பழமாவது வருமேய்யா! எலுமிச்சை பழம்ன்னா ஜுஸ் புழிஞ்சி நானும் சாப்பிடலாம், வர்றவங்களுக்கும் கொடுக்கலாமேய்யா... 
பணத்தை செலவு செய்யறது பெரிசில்ல... அதை முறையா செய்யணும்யா'' என்றார். ஒரு ஆப்பிளை மட்டும் எடுத்துக்கொண்டு, "இதே ஆப்பிளை வேறு யாராவது வி.ஐ.பியைப் பார்ககப் போனா யூஸ் பண்ணிக்கோ'' என்றார். 


சத்தியமாக இன்னும் ஏழேழு ஜென்மங்கள் என்று இருந்தாலும் அவற்றில் எதிலுமே இப்படி ஒரு வெள்ளந்தி அரசியல்வாதியை நாம் பார்க்கப் போவதில்லை!! ஒன்பது லட்ச ரூபாய்க்கு சூட்டு போட்டுக் கொண்டு எளிமை வாதி என படம் காட்டிக் கொண்டிருக்கும் தலைவர்களைதான் நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம் இன்று!!

பெருந்தலைவர்

கர்மவீரர்

கடமை விரர்

செயல் வீரர்

கல்விக் கண் திறந்தவர்

இப்படி எல்லாவற்றிற்க்குமே சரியாக் பொருந்திய மாணிக்கம் அவர். அரசியுலில் மிகப் பெரிய வெற்றிடத்தை விட்டுப் போய்விட்டார் பெருந்தலைவர். 

No comments: