Friday 27 February 2015

நவீனத்தை புறந்தள்ளிய மாடேர் உழவு!

தமிழர்களின் நுண்ணறிவு பல நூற்றாண்டுகளுக்கு ஈடு கொடுக்கும் வகையில் கண்டு பிடிப்புகளுடன் இருப்பது தான். ""சீரைத்தேடின் ஏரைத்தேடு'' என அவ்வை கூறினார்.
மாட்டேர் எளிய தொழில்நுட்பம், பெரிய நீண்ட பயிற்சி தேவை இல்லை. மாடு, மரக்கலப்பை எளிதில் கிடைக்கும். எங்கும் கிடைக்கும். ஒரு ஏக்கர் உழ ரூ.300க்கு ஏர் கிடைக்கிறது. டிராக்டருக்கு ரூ.600 சால் விதை தேவையான ஆழத்தில் விழுந்து முறையாக மண்ணால் மூடப் பட்டு நல்ல முளைப்பு திறன் கூடுது. மண்புழு சாவதில்லை. பறவைகள் கண்ணுக்கு படாமல் தப்புகிறது. சம மற்ற பூமியையும் உழுக உழுக சமம் செய்யலாம்.
உரக்காரணிகள் தானே மக்கி விடுகிறது.குறைந்த மழை ஈரத்திலும் உடனே உழுது விதைத்திடலாம். மழை பெய்த உடனே டிராக்டர் கிடைப்பதில்லை. குடும்பத்தில் 2 பேருக்கு வேலை கிடைக்கிறது. புல், பயிர், மாட்டுக்கு காசு போடாத தீனி கிடைக்கிறது. உழவு மாடு போடும் சாணம், மூத்திரம் காட்டுக்கு உடனடி உரம். இன்னும் பல யுகங்களை சமாளித்து ஜெயித்திடும். தோப்புகளில் மரநாற்றுக்கு பழுதின்றி உழ முடியும்.
சி.பழனிச்சாமி,
திருப்பூர். 99944 94223

நன்றி : தினமலர் 

No comments: