Sunday 22 February 2015

மாவீரன் ரா.தாமரை கனி நாடார்

தாமரை கனி அண்ணாச்சியின் பெயரை கேட்டாலே அவரது மோதிரமும், அதனால் காயமடைந்த வீரபாண்டி.ஆறுமுகமும் நினைவுக்கு வருவார்கள். அதே போல் பண்ருட்டியாரை இவர் செல்லமாக த்ட்டியதும் மறக்க முடியாத நிகழ்ச்சி. திருவில்லிபுத்தூரில் இவர் கோலோச்சியது ஐந்து வருடமோ பத்து வருடமோ அல்ல இருபத்தி ஐந்து வருடங்களுக்கு மேல். புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் தீவிர விசுவாசியாகவும், அதே போல் அவரது செல்லப் பிள்ளையாகவும் வலம் வந்தவர். எதற்கும் யாருக்கும் அஞ்சாதவர். தனக்கு சரி என பட்டதை வெளிப்படையாக உடைத்து (சில நேரம் பிறரது மூக்கையும்!) கூறியவர். திருவில்லிபுத்தூரில் இவர் இருந்த வரை இவரை தவிர வேறு யாராலும் கோலோச்ச முடியவில்லை! தனது கடைசி காலத்தில் கூட ஜெயாவின் சூழ்ச்சியால் தனது மகனிடம்தான் தோல்வியை தழுவினார். நாடார் குலத்துக்கு இவர் செய்த உதவிகளும் அளப்பறியாதவையே. இவரது இடத்தினை நிரப்ப அவரது பிள்ளைகளால் கூட முடியவில்லை என்பதே உண்மை!!




1946ம் வருடம் அக்டோபர் 19ம் தியதி ராமசாமி நாடார் மற்றும் சன்முகத்தம்மாள் அவர்களின் மகனாக பிறந்தார். சிறு வயதிலேயே புரட்சி தலைவரின் தீவிர ரசிகராக இருந்த இவர், எம்ஜிஆர் ரசிகர் மன்ற தலைவராகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. விருதுநகரில் மாற்று சமூக மக்களால் நாடார் வணிகர்களுக்கு மிரட்டல்கள் விடப்பட்டு, விருதுநகர் பஜாரில் நாடார்கள் நிம்மதியாக நடமாட முடியாத காலக்கட்டம் ஒன்று இருந்தது. அது கரிக்கோல் நாடார் அண்ணாச்சி போன்றோர் விருதுநகரில் தலையெடுத்து வந்து கொண்டிருந்த காலக்கட்டம். அப்போது மாற்று சமுதாயத்தாரின் கொட்டத்தை அடியோடு அடக்க கரிக்கோல் அண்ணாச்சி போன்றோருக்கும், நாடார் மக்களுக்கும் அருகிலுள்ள மாவட்டத்துக்காரரான தாமரை கனி அவர்களின் செய்த உதவியும் சேவையும் அளப்பறியாதது.

1977, 1980, 1984 என மூன்று முறை தொடர்ச்சியாக புரட்சித்தலைவர் தலைமையிலான அதிமுக சட்டமன்ற உறுப்பினராக திருவில்லிபுத்தூரில் தேர்ந்தெடுக்கப் பட்டார். 1989ல் ஜானகி அணியில் இணைந்த இவர், 1991ல் சுயேட்சையாக திருவில்லிபுத்தூரில் சட்டமன்ர தேர்தலில் வென்றார். பின்னர் ஜெயாவின் அதிமுகவில் இணைந்த இவர் 1996ல் குறுகிய காலத்திற்கு அதிமுகவின் சட்டமன்ற தலைவராகவும் செயல்பட்டார். மூன்று ஆண்டுகள் திருவில்லிபுத்தூர் மாமன்ற தலைவராகவும் இருந்தார். 2001ல் அதிமுக பழைய புரட்சிதலைவர் அவர்களின் அதிமுக போல் இல்லையென திமுக வில் இணைந்து சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டார்.

அப்போது அவரை எதிர்த்து போட்டியிட்டவர் அவரது சொந்த மகனான இன்பத்தமிழன். இதுதான் நாடார்களின் சாபக்கேடு. சமூகத்தில்தான் ஒற்றுமை இல்லையென்றால் நாடார்கள் குடும்பத்திலும் இருக்காது!! தாமரக்கனி அவர்களை அசிங்கப்படுத்துவதாக நினைத்து அவரது மகன் இன்பத்தமிழனுக்கு அமைச்சர் பதவியும் குடுத்தார் ஜெ. அதன் பின் அவர் நோய்வாய்பட்டு மருத்துமனையில் அனுமதிக்கப் பட்டபோதும், அவர் இறந்த பின் அவரது இறுதி சடங்குகளிலும் சரி இன்பத்தமிழன் கலந்து கொள்ளவில்லை. என்ன இருந்தாலும் என்ன தாமரை கனி அண்ணாச்சி வாழ்ந்த வரையும் சரி யாருக்கும் தலைவணங்காமலே வாழ்ந்தார். புரட்சித் தலைவர் அவர்களின் பாசத்துக்கு மட்டுமே கட்டுண்ட மாவீரனாய் இருந்து மறைந்தார்.

மதுரையில் அறிவானந்த பாண்டியன் அண்ணாச்சி, திருவில்லிபுத்தூரில் தாமரை கனி அண்ணாச்சி, நெல்லையில் கராத்தே செல்வின் போன்றோர் விட்டு சென்ற வெற்றிடங்கள் இன்னும் நிரப்பப் படாமல் வெற்றிடமாகவே உள்ளன. மூவரை பற்று என்ன அவதூறுகள் கூறினாலும் மூவருமே மாவீரர்கள் என்பது மறுப்பதற்கில்லை!!!

2 comments:

Unknown said...

Excellent information. Super man Thamarai kani

Unknown said...

Excellent information. Super man Thamarai kani