Monday 23 February 2015

திருமங்கலம் பெரிய காத்தவராயன் கோவில்


பெரியக்காத்தவராயன் கோவிலானது திருமங்கலம்-மதுரை மாவட்டத்தில் அமைந்துள்ளது. 21தெய்வ வழிபாடுத்தளம் ஆகும். மூலதெய்வமாக காமாட்சி அம்மன் வீற்றிருக்குகிறாள். காவல்தெய்வமாக ஸ்ரீகாத்தவராயன் சுவாமிகள்வீற்றிருக்குகிறார் .கல்யாணத்தடைகளை நிவர்த்தி செய்யும் ஏழுகன்னிமார்தெய்வம் இருக்குகிறார்கள். வருடத்தில் ஒரு முறை பாரிவேட்டை நடைபெறும்,முன்று நாட்கள் சிறப்பாக நடைபெறும். சிவராத்ரி அன்று சிறப்பாக பூஜை நடைபெறும்.
வழி-மதுரை to திருமங்கலம் பஸ் வசதி  எண் 48,49
             விருதுநகர் to திருமங்கலம் பஸ் வசதி  எண் 13
(திருமங்கலம் ரயில் நிலையம் மிக அருகாமையில் அமைந்துள்ளது)



தள புராணம்
மதுரை மாவட்டம் பெரியகுளத்தை அடுத்த தேவதானப்பட்டி பகுதிகளை இராஜ கம்பளத்தார் என்ற தெலுங்கு தேசத்து ஜமீன்தார் ஆட்சி செய்து வந்தார். தேவதானப்பட்டி ஜமீன் குடும்பத்தை சார்ந்த பூசாரி நாயக்கர் காலத்தில் அமைக்கப்பட்ட ஆலயம் தேவதானப்பட்டி காமாட்சி அம்மன் ஆலயம் ஆகும்.குழந்தை செல்வம் இல்லாத அரசர் ஒரு நாள் வேட்டைக்காக கொடைக்கானல் மலை அடிவாரத்தில் உள்ள மஞ்சள் ஆற்றின் கரையில் குதிரையில் சென்று கொன்றிந்தபொது ஆற்றின் கரையில் ஒரு பெட்டி மிதந்து வருவதை கண்டு ஆற்றில் இறங்கி அப்பெட்டியை தொட்டவுடன் ஒரு அசரிரிவாக்கு கேட்டது.






"பெட்டியை தொடதே! பெட்டியில் நான் காமாட்சி மந்திர ரூபமாக இருக்கின்றேன். என்னை சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் ஒரு தவ முனிவர் கொடைக்கானல் மலை மீது உள்ள தலையாறு நீர்வீழ்ச்சிக்கு பக்கத்தில் உள்ள "கரியமால்" என்ற வனப்பகுதியில் "அம்மா மச்சு" என்று இன்று அழைக்கப்படும் பகுதியில் என்னை மந்திரரூபமாக அமைத்து வழிபட்டு வந்தார். தான் இறைநிலை அடையும் காலம் வருவதை தன் தவ வலிமையால் உணர்ந்து மூங்கில் கூடை ஒன்றில் மந்திர ரூபமான நான் உள்ள சக்கரத்தை வைத்து மந்திரத்தால் அதை காப்பிடு வைத்தார் . அதை "முத்துராங்கப்பெட்டி " என்று அழைத்தார் .அந்த முத்துராங்கப்பெட்டி பல நூறு ஆண்டுகளுக்குப்பின் இன்று பெருமழையின் காரணமாக ஆற்றில் அடித்து வரப்பட்டது. என்னை வைத்து உன்னால் பாதுக்காக்க முடியாது. என் முறைகளை கடைப்பிடிக்க முடியாது என்னை விட்டுவிடு " என அன்னை காமாட்சி கூறினார் .






உடன் ஜமீன்தார் "அம்மா உன் முறைப்படி நானும் உன்னை வைத்து நானும் எனது வம்சத்தினரும் பூஜை செய்வோம் . முறை பிசகமாட்டோம் "என வாக்குறுதி கொடுத்து அன்னையின் சம்மதத்துடன் முத்தாரங்கப் பெட்டியை எடுத்து வந்து அன்னை காமாட்சிக்கு மஞ்சள் ஆற்றின் கரையில் ஆலயம் அமைத்தார் .






தேவதானப்பட்டியில் உள்ள மஞ்சள் ஆற்றின் கரையில் அன்னை காமாட்சியின் அருள்வாக்கின்படி நாணல் புல் கொண்டு கூறை வேய்ந்தது அந்த குச்சிலுக்குள் அன்னை வாசம் செய்யும் முத்தாரங்கப் பெட்டியினை வைத்து அதன்முன் திருவிளக்கு ஏற்றி அன்னையை வணங்கி வந்தார்.






தேவதானப்பட்டி அன்னை காமாட்சி ஆலயம் அனைத்து சாதிமக்களும் வந்து வணங்கும் சக்தி வாய்ந்த ஆலயமாக விளங்கியது . அன்னை காமாட்சியை வணங்கியதால் குழந்தைச் செல்வம் இல்லாதவர்கள் குழந்தைச் செல்வம் அடைந்தார்கள் . நோய்கள் குணமாகின . வறுமை தொலைந்து பலர் வளமையான வாழ்வு பெற்றனர் . தேவதானப்பட்டி காமாட்சி அம்மன் ஆலயத்தின் புகழ் நாடு எங்கும் பரவியது .


மதுரையை தலைநகராக கொண்டு தென்னாட்டை திருமலை நாயக்கர் ஆட்சி செய்து வந்த காலம். தென்பாண்டிநாட்டில் உள்ள நாடார் குல வணிகர்கள் வணிக பொருட்களை பொதிமாடுகளில் ஏற்றி கொண்டு பல ஊர்களுக்கு சென்று விற்று வந்தனர் .

பாஞ்சாலங்குறிச்சியை சார்ந்த சாமணத்தம் என்ற கிராமத்தில் வாழ்ந்த நாகப்பநாடார் என்பவர் தன் பொதி மாடுகளில் வணிக பொருட்களை ஏற்றி கொண்டு வணிக பொருட்களை மதுரை மாவட்டத்தில் உள்ள பெரிய குளத்திற்கு விற்பனை செய்வதற்காக வந்திருந்தார் . அவருக்கு நீண்ட காலமாக குழந்தை இல்லை. அவரது நண்பர்களும் உறவினர்களும் தேவதானப்பட்டி அன்னை காமாட்சியை வணங்கி அங்கே மூன்று நாள் கோவிலில் தங்கி முறையாக விரதம் இருந்தால் நினைத்த காரியம் நடக்கும் என்று சொன்னதை ஏற்று வியாபாரத்திற்கு வந்த நாகப்பநாடார் தேவதானப்பட்டி காமாட்சி அம்மன் ஆலயத்தில் மூன்று நாள் கடுமையான விரதம் இருந்தார். அம்மா காமாட்சி எனக்கு வாரிசாக ஓர் ஆண்மகனை கொடு . நான் அவனுக்கு உன் மகன் காத்தவராயன் பெயர் வைக்கின்றேன் என மனமுருகி வேண்டிக்கொண்டார்

அன்னை காமாட்சியின் கருணையில் நாகப்பநாடார் மனைவி கருவுற்று பத்தாவது மாதம் அழகிய ஓர் ஆண் குழந்தையை பெற்றெடுத்தாள் .

நாகப்பநாடார் தன் மகனுக்கு காத்தவராயன் பெயர் என பெயர் சூட்டினார்.காத்தவராயன் வளர்ந்து வாலிப வயதை அடைந்தான் . நாகப்பநாடார் முதுமை பருவத்தை அடைந்தார் .தன் தகப்பன் செய்து வந்த வியாபாரத்தை காத்தவராயன் ஏற்று கொண்டான் . வியாபார நிமித்தம் பெரியகுளம் செல்லும் போதெல்லாம் தேவதானப்பட்டி அன்னை காமாட்சி ஆலயம் சென்று அன்னையின் பொற்பாதம் பணிந்து வருவான் . அன்னை காமாட்சியிடம் பயமும் பக்தியும் கொண்டு ஒழுக்கமுள்ளவனாக காத்தவராயன் விளங்கினான் .

தேவதானம்பட்டி மஞ்சள் ஆற்றின் கரையில் அன்னை காமாட்சிக்கு ஆலயம் அமைத்து ஜமீன்தார் பூஜை செய்து வந்தார் .அதற்குப்பின் அவரது மகனும் பேரனும் மட்டுமே பூஜை செய்ய முடிந்தது . அன்னை காமாட்சியின் வாக்குப்படி முறையாக பூஜை செய்யாத காரணத்தால் ஜமீன் குடும்பத்தில் பல தொல்லைகள் ஏற்பட்டன . தன் குடும்பத்தில் ஏற்படும் தொல்லைகளுக்கு அன்னை காமாட்சி சொன்னபடி முறைகள் செலுத்த முடியாமை தான் காரணம் என்று புரிந்து கொண்டு இனி கோவிலில் பூஜையை நிறுத்தி விடுவது, கோவிலை மூடிவிடுவது என்று ஜமீன்தார் முடிவு செய்தார்.

அதை அறிந்த உள்ளூர் தமிழ் மக்களாகிய மன்னடியார் என்ற சாதியினர் அன்னை காமாட்சியின் மீது பக்தி கொண்டு கோவிலை பூட்ட வேண்டாம். நாங்களே கோவில் முறைகளை முழுமையாக கடைப்பிடித்து பூஜை செய்கின்றோம் . பூஜை பொறுப்பை மட்டும் எங்களிடம் கொடுங்கள் என்று கேட்டுக் கொண்டனர் . ஜமீன்தார் பூஜை செய்யும் பொறுப்பை மன்னடியர் சாதியிடம் ஒப்படைத்தார் . மன்னடியர் சாதியினர் மூன்று தலைமுறைகள் பூஜை செய்து வந்தனர் . மூன்றாவது தலைமுறையில் அன்னை காமாட்சி தன் இருப்பிடத்தை மாற்றி அமைக்க திருவுள்ளம் கொண்டாள். தனக்கு தொண்டு செய்யும் தொண்டனாக நாடார் குலத்தில் உதித்த காத்தவராயனை காமாட்சி தேர்ந்தெடுத்தாள்.

பொதிமாடுகளில் வாணிபப் பொருட்களை ஏற்றி கொண்டு பெரியகுளம் நோக்கி காத்தவராயன் சென்றான். வாணிபத்தை முடித்து கொண்டு ஊர் திரும்பும் வழியில் தேவதானம்பட்டி சென்று அன்னை காமாட்சியை வணங்க சென்றான். அவனுடன் விருதுபட்டி , சிவகாசி , மதுரை , திருமங்கலம் போன்ற ஊர்களை சேர்ந்த நாடார் குல வணிகர்களும் உடன் சென்றனர் . தங்களுடன் வந்த பொதிமாடுகளை கோவிலுக்கு முன்புறம் உள்ள மஞ்சள் ஆற்றின் கரையில் நிறுத்திவிட்டு அன்று இரவு அங்கு தங்கினார்கள். இரவு மணி பன்னிரெண்டுக்கு மேல் இருக்கும் தூங்கி கொண்டிருந்த காத்தவராயன் தன்னை யாரோ தட்டி எழுப்புவது போன்று அறிந்து விழித்து எழுந்தான். ஆலயத்தின் மூலஸ்தானத்தில் ஒளி ஒன்று அவன் கண்களுக்கு தெரிந்தது. அவன் தன் உணர்வு இல்லாமல் மூலஸ்தானத்தில் முத்துராங்கப்பெட்டி இருப்பதை கண்டு அவனை அறியாமல் அதன் முன் சாஸ்டாங்கமாக விழுந்து வணங்கினான்.தன் உடலில் ஏதோ ஓர் சக்திபுகுந்து தன்னை இயக்குவதை உணர்ந்தான்.

அன்னையின் முன் விழுந்து வணங்கி எழுந்த உடன் அவனை அறியாமல் சுயநினைவின்றி தன் தோளில் போட்டிருந்த துண்டை எடுத்து முத்தாரங்கப்பெட்டியை மூடி தன் தோளில் வைத்துக் கொண்டு கோவிலை விடு வெளியேறினான். நேரே தன் பொதிமாடுகள் உள்ள இடத்திற்கு சென்ற பின் தன் மாடுகளில் ஒன்றின் முதுகின் மீது முத்தாரங்கப் பெட்டியை வைத்து அதன் மீது துணி கொண்டு மூடினான், பின்பு கயிறு கொண்டு கீழே விழாமல் கட்டினான். கட்டி முடித்தவுடவுன் முத்தாரங்கப் பெட்டியை தன் முதுகில் சுமந்திருந்த பொதிமாடு மெல்ல நடக்க ஆரம்பித்தது. காத்தவாரயனும் மற்றும் வணிகர்களும் அந்த பொதி மாட்டை பின்பற்றி நடந்தார்கள். அவர்களால் அதை தொட முடியவில்லை. அவர்கள் நடக்க முடியாமல் நின்றால் அந்த மாடும் நிற்கும் . அவர்கள் ஓடி வந்தால் மாடும் ஓடும் . அவர்கள் அனைவரும் அன்னையின் தவபுதல்வர்களாக அன்னையின் பின் நடந்து சென்றார்கள். காத்தாவரயன் காமாட்சி அம்மன் ஆலயத்தின் மூலஸ்தானத்தில் இருந்து முத்தாரங்கப் பெட்டியை எடுத்து வரும் போது தூங்கியவர்கள் போக மீதி பேர்கள் மயக்கநிலை அடைந்தார்கள் .

பொழுது புலர்ந்த உடன் மூலஸ்தானத்தில் இருந்த அன்னை காமாட்சி அருளாட்சி செய்யும் முத்தாரங்கப் பெட்டியை காணவில்லை என்பதை அறிந்தவுடன் பூஜை செய்து வந்த மன்னடியார்கள் பயம் கொண்டார்கள். ஒரு பக்கம் தெய்வ குற்றம் மறுபக்கம் ஜமீந்தாருக்கு என்ன பதில் கூறுவது அவரது தண்டனையிலிருந்து எப்படி தப்புவது என ஆலோசனை செய்தனர். அவர்கள் ஒரு முடிவுக்கு வந்தனர். முத்தாரங்க பெட்டி காணமல் போன விபரம் ஜமீனுக்கும் மக்களுக்கும் தெரிவதற்கு முன் கோவில் கதவை மூடினார்கள். கோவில் முன் பக்தர்களை அழைத்து எங்களால் முறையாக பூஜை செய்ய முடியவில்லை. ஆதலால் கோவில் திருக்கதவை நங்கள் மூடுகின்றோம். எவரேனும் இதை திறக்க கூடாது. இது அன்னை காமாட்சியின் மீது சத்தியம் என்று சத்தியம் செய்தனர்.பின் பூசாரியும் அவரது குடும்பத்தினரும் ஜமீன்தாரின் தண்டனைக்கு பயந்து கொடைகானல் மலையில் உள்ள தண்டிக்குடி கிராமத்தில் போய் குடியேறினர். அன்றிலிருந்து இன்று வரை தேவதானப்பட்டி அன்னை காமாட்சி அம்மன் ஆலயக்கதவுகள் திறக்கப்படவே இல்லை. ஆலயக்கதவுகளுக்கு முன் திருவாட்சி அமைத்து அதன்முன் திருவிளக்கு ஏற்றி அன்னை காமாட்சியை மக்கள் வணங்கி வருகின்றார்கள்

காத்தவராய நாடாரும் அவரது நண்பர்களும் தங்கள் ஊர் நோக்கி வரும்போது பல இடங்களில் தங்கி வந்தார்கள். அன்னை காமாட்சி அருளாட்சி செய்யும் முத்தாரங்கப்பெட்டியுடன் மதுரை வந்த நாடார் குல மக்களில் மதுரையை சேர்ந்தவர்கள் மதுரையில் சிம்மக்கல் அருகில் அன்னையின் அருள்வாக்கின்படி காமாட்சி அம்மன் ஆலயம் ஒன்று அமைத்தார்கள். மதுரையில் இருந்து புறப்பட்டு திருமங்கலம் வந்து சேர்ந்தவுடன் அன்னை காமட்சியின் அருள்வாக்கின்படி திருமங்கலத்தில் திருமங்கலத்தை சார்ந்த நாடார் குல மக்கள் அன்னை காமாட்சிக்கு ஆலயம் அமைத்தார்கள். திருமங்கலத்திலிருந்து புறப்பட்ட காத்தவராய நாடரும் மற்றும் வணிகர்களும் விருதுபட்டி வந்து சேர்ந்தார்கள். அன்னையின் அருள்வாக்கின்படி விருதுபட்டியை சார்ந்த நாடார் குல மக்கள் விருதுபட்டியில் அன்னை காமாட்சிக்கு ஓர் ஆலயம் அமைத்தார்கள். விருதுபட்டியிலிருந்து புறப்பட்டு அன்னை காமாட்சி அருளாட்சி செய்யும் முத்தாரங்கப்பெட்டியுடன் காத்தவராய நாடார் தன் சொந்த ஊரான சாமணத்தம் என்ற கிராமத்தை வந்தடைந்தார்.

No comments: