Monday 23 March 2015

சிங்கப்பூர் சிற்பி திரு.லீ குவான் யூ பாகம் 1

எதுவுமே இல்லை என்பதிலிருந்து எதுவும் சாத்தியம் என்பதை சாதித்து காட்டிய லீ குவானின் மறைவு சிங்கப்பூர் மக்களிடையே மட்டுமல்லாது, உலக அளவிலும் அதிர்ச்சியையும், துயரத்தையும் ஏற்படுத்தி உள்ளது.லீ குவான் யூ நவீன சிங்கப்பூரைச் செதுக்கியவர். சிங்கப்பூர் ராபல்ஸ் என்பவரால் நிர்மாணிக்கப்பட்டது. பல்வேறு தீவுகளைக்கொண்ட சில நூறு சதுரகிலோமீட்டர்கள் கொண்ட சிறிய தேசம் அது. ராபல்ஸ் கட்டுப்பாடுகள் அற்ற துறைமுகமாகச் சிங்கப்பூரை மாற்றினார். இங்கிலாந்து ஆதிக்கத்தின் கீழ் அப்பகுதி ஒரு ஐம்பது வருடங்களுக்கு முன்வரை இருந்தது. லீ குவான் யூ நான்கு தேசியகீதங்கள் பாடுகிற அளவுக்கு நாட்டில் இந்த ஐம்பது வருட காலத்துக்குள் எண்ணற்ற மாற்றங்கள் நிகழ்ந்தன.


 சிங்கப்பூர்குடியரசின் முதல் பிரதமர் (1959 - 1990) ஆவார்.இவரை சிங்கப்பூரின் தந்தை எனச் சொல்லுவர். இவர் சிங்கப்பூர் மக்கள் செயல் கட்சியின் (PAP) நிறுவனர்களுள் ஒருவரும் ஆவார்.நவம்பர் 12 ஆம் நாள் 1954 ஆம் வருடம் மக்கள் செயல் கட்சியை நிறுவினார்.1959 முதல் 1990 வரை இவரது மக்கள் செயல் கட்சியை 7 முறை வெற்றிபெற வைத்தவர்.1990 - ல் மக்கள் செயல் கட்சியின் கோ சோக் தோங்கு பிரதமராக இருக்கும் போது இவர் அதில் ஒரு முதுநிலை அமைச்சராகப் பணியாற்றினார். சிங்கப்பூரின் மூன்றாவது பிரதமரான லீ ஹசீன் லூங், இவரின் மகன் ஆவார். லீ குவான் யூ பிரதமர் ஆட்சியில் இருந்து விலகிய பின்னரும் சிங்கப்பூரின் மிக முக்கியமான அரசியல்வாதியாக இருக்கிறார். . பின்னர் 2004 முதல் 2011 வரை இவருக்காகவே உருவாக்கப்பட்ட மதியுரை அமைச்சர் (Minister Mentor) பதவியில் பணியாற்றினார். லீ சிங்கப்பூரில் 92 கம்போங் ஜாவா சாலை 1923-இல் ஒரு பிரிட்டிஷ் பிரஜையாக பிறந்தார். லீ முதன் முதலில் டெலோக் குராவோ முதன்மைப் பள்ளியில் படித்துள்ளார். பின்னர் அவர் ராஃபிள்ஸ் நிறுவனத்தில்(RI) பயின்றார். அவர் இந்நிறுவனத்திற்காக கிரிக்கெட், டென்னிஸ், சதுரங்கம் விளையாடி பல விவாதங்களில் பங்கு கொண்டுள்ளார். லண்டனில் படிப்பு முடித்து அவர் 1949ல் சிங்கப்பூர் திரும்பினார்

லீ குவான் யூ, அவரின் வாழ்க்கை வரலாற்றில் தான் நான்காவது தலைமுறைச் சிங்கப்பூர்காரர் என்று குறிப்பிட்டுள்ளார். அவரின் மூதாதையார் லீ போக் பூன், 1846ஆம் ஆண்டு சீனாவில் உள்ள குவாங்தொங் மாகாணத்தில் இருந்து வெளியேறி சிங்கப்பூரின் Strait settlementsக்கு 1863ல் வந்ததாக கூறி உள்ளார். லீ குவான் யூவின் தாத்தா லீ ஹூட் லாங் 1871ல் சிங்கப்பூரில் பிறந்தவராவார். லீ குவான் யூ வழக்கறிஞர் படிப்பை முடித்தவர். லீயின் குடும்பத்தினர் பலர் சிங்கப்பூர் சமூகத்தில் முக்கியப் பதவிகளில் உள்ளனர். அவரது இளைய மகன், லீ ஹசைன் யாங், முன்னாள் பிரிகேடியர் ஜெனரல் மற்றும் முன்னாள் தலைவராக இருந்துள்ளார் மற்றும் மேலும் சிங்டெல் நிறுவத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் இருந்துள்ளார்.

லீ, செல்வம் வளம் மிகுந்த பாபாக்கள் என்று அழைக்கப்படும் சீனப் பாரம்பரியம் கொண்ட தொழிற்துறையில் இயங்குகிற குடும்பத்தில் வளர்ந்தவர். தங்கத்தட்டில் ஏந்திப் பிள்ளையைக் கொண்டாடினார்கள். தனக்குப் பிறந்த அத்தலைமகனுக்கு பெற்றோர்கள் நல்ல பெயராகத் தேடிக்கொண்டிருந்த போது அவற்றில் ஞானம் பெற்ற நண்பரொருவர் சொன்ன பெயர்தான் 'குவான் யூ.' (லீ என்பது குடும்பப்பெயர்!) 'லீ குவான் யூ' என்ற அப்பெயரின் அர்த்தம் என்ன தெரியுமா? முதல் அத்தியாத்தின் மூலம்தான் அது - 'ஒளியும் வெளிச்சமும்!'

விதைகளில் விருட்சம் இருக்கலாம்; இங்கே வெளிச்சமும் இருந்திருக்கிறது!

'எரிந்துகொண்டிருக்கும் ஒரு விளக்கிலிருந்து எத்தனை தீபங்கள் ஏற்றினாலும் அது அதன் வெளிச்சத்தை இழந்துவிடுவதில்லை. மாறாக வெளிச்சத்தை பல்கிப்பெருக்குகிறது அது. பகிர்ந்துகொள்ளப்படும் எந்த ஒரு ஞானமும் அப்படித்தான்! எல்லா இடத்தையும் அது அதனால் நிரப்பிக்கொள்கிறது' என்பது கௌதம புத்தரின் அருள்மொழி. 'என்னுடன் அல்லது என் கருத்துகளுடன் ஒத்துப்போகும் எவரிடமும் நான் எதையும் கற்றுக்கொள்வதில்லை' என்பது இன்னொரு அறிஞரின் பொன்மொழி. ஒத்த குறிக்கோளுக்கு உறுதுணையாய் நிற்கும் பல்வேறு சிந்தனைகளும் கருத்துகளும் தெளிவாக ஆலோசிக்கப்படும்பொழுது, அது, தீர்வாக நல்லதொரு தீர்மானத்தைக் கொண்டு வரும். 

உலகம் முழுவதும் கம்யூனிசத்தைப் பரப்பவேண்டும் என்ற கம்யூனிச சிந்தனாவாதிகளுக்கு மிகவும் ஏற்ற இடமாய் காலம்காலமாய் விளங்கியது இங்கிலாந்து பல்கலைக்கழகங்கள். வெளிநாடுகளிலிருந்து படிப்பதற்கென்று மக்கள் குவிந்த இடம் இங்கிலாந்துதான். இளரத்தமும் வேகமும் புதியதை சாதிக்கும் ஆற்றலும் படிக்க வந்திருக்கும் இளைஞர்களான அவர்களுக்குத்தான் இருக்கும் என்பதையறிந்து அவர்களைத்தான் குறிவைத்து காய்களை நகர்த்தினர் அந்த கம்யூனிச சிந்தனைவாதிகள்.



இது ஒருவகையில் நன்மையே! கெட்டது எது என்பதை முதலில் தெரிந்துகொண்டால் நல்லது எது என்பதைக் கண்டுபிடிக்க நமக்கு நேரம் ஆகாது. ஆரோக்கியமில்லாதவைகளையும் அவற்றின் வீச்சுகளையும் புரிந்துகொண்டால் அடுத்தது எது என்பதை நோக்கி நம்மையறியாமலே நாம் நகரத்தொடங்குவோம்; கண்டுகொள்வோம். ஒப்பீடுகளின் மதிப்பில் மேற்கொண்டு பயணிப்போம்.

தனது மகனை ஒரு வழக்கறிஞனாகவே பார்க்கவேண்டும் என்று முடிவு செய்துகொண்டிருந்த அவரது தாயாரின் விருப்பத்திற்கிணங்க, '65000 டன்' எடைகொண்ட 'பிரிட்டானிக்' கப்பலில் 1946 ஆம் ஆண்டு அக்டோபரில் இங்கிலாந்து புறப்பட்டார் திரு. லீ குவான் யூ. சட்டப்படிப்புக்கு அங்கு அவருக்கு இடம் கிடைக்காததால் லண்டன் மாநகரில் உள்ள பொருளாதரப்பள்ளியில் சேர்ந்தார். சிறிது நாட்களுக்குப்பிறகு தனது நண்பனொருவன் உதவியால் கேம்பிரிட்ஜ் யுனிவர்சிட்டியில் சட்டப்படிப்புக்கு இடம் கிடைத்தது.

கல்லூரியில் புதிதாக சேரும் மாணவர்களைத் தங்கள் அமைப்புக்குள் சேர்ப்பதற்காக அங்கிருக்கும் சோசியல்ஸ்ட் கிளப், லேபர் கிளப், கன்சர்வேடிவ் கிளப் முதலியன அடிக்கடி முயன்று வந்தன. புதுமாணவர்களிடையே அவைகள் தங்களது கொள்கை மற்றும் விளக்கங்களைப் பிரசங்கங்கள் வழியாக பரப்பிக்கொண்டிருந்தன. 'சோசியல்ஸ்ட் கிளப்' என்பது கம்யூனிஸ்ட் கட்சி சார்ந்தது என்பதை சீக்கிரமே திரு. லீ உணர்ந்துகொண்டார்.

மலாயாவின் 'துங்கு அப்துல் ரஹ்மான்' அவர்கள், மலாயா-சிங்கப்பூர் மாணவர்கள் கலந்து காலனியாட்சி மற்றும் விடுதலை பற்றி கலந்துரையாடுவதற்கு 'மலாயன் கருத்தரங்கம்' என்ற அமைப்பைத் தொடங்கினார். 1950 ஆம் ஆண்டு முதல் லீ குவான் யூ அவர்கள் இதில் அடிக்கடி பங்கேற்று வந்தார். திரு. லீ அவர்களைத் தவிர சிங்கப்பூரிலிருந்து அங்கு பயின்று வந்த டாக்டர் டோ சின் சை, டாக்டர் கோ கெங் சுவீ, துன் அப்துல் ரசாக் மற்றும் கே.எம்.பர்ன் ஆகியோர்களும் அதில் பங்கேற்றனர்.

பல்வேறு இனத்தவர்களையும் பல மொழிகளையும் உடைய ஒரு நாட்டிற்கு கம்யூனிசம் ஒத்துவராது என்பதை லண்டன் வாழ்க்கை திரு. லீ அவர்களுக்குக் கற்றுக்கொடுத்தது. 

திரு. லீ அவர்கள் அந்த மலாயா கருத்தரங்கத்தில் பேசிய ஒரு தலைப்பின் பெயர் 'நாடு திரும்பும் மாணவன்.' 'கம்யூனிச கொள்கைகளில் தீவிரம் கொண்டவரோ அல்லது ஜனநாயகத்தில் நம்பிக்கை உள்ளவரோ எவராயினும் படித்துவிட்டு நாடு திரும்பும் அந்த மாணவரின் பங்கு அந்நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்கு மிகவும் அவசியமானது' என்பது அவர் அன்று பேசிய பேச்சின் கருத்தாக இருந்தது. 'நம்மை ஆண்டுகொண்டிருப்பவர்களும் ஆங்கிலேயர்கள். நாமும் ஆங்கிலேயர்களிடம் தான் படித்துவிட்டுத் திரும்புகிறோம். நம்மை அவர்கள் அடிமையாய் நடத்தினாலும் லண்டனில் படித்த நமது கருத்துகளூக்கு நிச்சயம் மதிப்பளிப்பார்கள்' என்பதும் அவரது பேச்சின் சாராம்சம்.

இந்தியா, பாகிஸ்தான், சிலோன் மற்றும் பர்மா ஆகிய நாடுகளுக்கு அடுத்தடுத்து சுதந்திரம் கிடைத்த தருணத்தில் நடைபெற்ற மலாயன் கருத்தரங்கில் பின்வரும் கருத்தை முன்வைத்தார்.

'இங்கிலாந்தில் கல்வி கற்றுத் திரும்பிய இந்தியர்கள், பாகிஸ்தானியர்கள், சிலோனீஸ், பர்மியர்கள் ஆங்கில ஆட்சிக்கு எதிராகப் போராடினார்கள். ஹாலந்தில் கல்வி கற்றுத் திரும்பியவர்கள் இந்தோனேசிய சுதந்திரத்திற்காய்ப் பாடுபட்டார்கள். அமெரிக்காவில் கல்வி கற்றவர்கள் பிலிப்பைன்ஸ் சுதந்திரத்திற்காய்ப் பாடுபட்டார்கள். இந்த நாடுகளுக்கு இடையே தான் இருக்கிறது மலாயா. ஆங்கில ஏகாதிபத்தியம் வெளியேற நமக்கும் வாய்ப்பு இருக்கிறது. ஆனால் நம் இன மக்களிடையே ஒற்றுமை வேண்டும். தற்போது பலம் பொருந்தியதாய் இருக்கும் மலாயா கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஆங்கிலேயர்களை வெளியேற்றக்கூடிய சக்தி இருக்கிறது. ஆனால் கம்யூனிஸ்ட்டுகளை அவர்கள் ஆதரிக்கமாட்டார்கள். கம்யூனிஸ்ட்டுகளின் பேச்சு ஆங்கிலேயர்களிடம் எடுபடாது. அதற்கு ஜனநாயகத்தை ஆதரிக்கும் நம்மைப் போன்றவர்கள் வேண்டும். நாட்டில் ஒருமித்த கருத்து ஏற்படும் வரை, நம்மிடம் ஒற்றுமை ஏற்படும் வரை ஆங்கிலேயர்கள் இருக்கவேண்டும். அதற்குப்பிறகு அத்தலைமையை ஆங்கிலேயர்களிடமிருந்து நாம் எதிர்பார்ப்போம். நாமெல்லாம் லண்டனில் படித்தவர்கள் என்பதாலும் கம்யூனிசத்தில் நம்பிக்கை இல்லாதவர்கள் என்பதாலும் அவர்களூம் இதற்கு சம்மதம் தெரிவிப்பார்கள். மக்களும் அத்தகு தலைமையைத்தான் எதிர்பார்க்கிறார்கள்' என்று விரிவாகப்பேசினார். 

'மலாயக்கார முஸ்லீம், மலாய சீனர், மலாய இந்தியர், மலாயா யுரேசியர்கள் என்பதையெல்லாம் விடுத்து 'மலாயன் சமுதாயம்' என்ற ஒருமித்த கருத்தை மக்களிடையே ஏற்படுத்துவதுதான் இப்போது நாம் செய்யக்கூடிய மிகச்சிறந்த காரியமாக இருக்கும். கல்வி கற்றுத்திரும்பும் நமக்கு இப்போது இருவழிகள் உள்ளன. ஒன்று நம் பொருளாதார வசதிகளைப் பெருக்கிக்கொள்வது. மற்றொன்று அரசியலில் ஈடுபடுவது. அரசியலில் நம்மைப்போன்றவர்கள் விலகி இருந்தால் ஆங்கிலேயர்கள் மலாயாவிலிருந்து விலகியபின் நாம் அங்கு நிம்மதியாக வாழ்வதற்கு ஒரு இடம் கூட இருக்காது' என்பதும் அவரது வாதம். 

எவ்வளவு கனமான ஆழம் பொதிந்த சிந்தனைகள் பாருங்கள்! இந்தியாவிலிருந்தும் ஆங்கிலேயர்கள் வெளியேறினார்கள். அப்போதிருந்த ஒரு சில நல்லவர்களும் அத்தோடு விலகிப்போனதால் இப்போது எப்படி இருக்கிறது பார்த்தீர்களா இந்திய அரசியல் சூழ்நிலை? படித்தவர்கள், நல்லவர்கள் பங்கேற்கும் நிலையிலா அது இருக்கிறது? படித்தவர்களாகிய நாம் இப்போது என்ன செய்யவேண்டும்?

இப்படியெல்லாம் சிந்தனைகள் செய்துகொண்டு வழக்கறிஞராய் 'வில்லியம் ரூஸ்' என்ற டச்சுக் நாட்டுக் கப்பலில், சக தோழர் 'திரு. கோ கெங் சுவீ'யுடன் நாடு திரும்பிக்கொண்டிருந்தார் திரு. லீ அவர்கள். சிங்கப்பூரின் உள்நாட்டுப்பாதுகாப்பு பிரிவுக்குத் தலைவராய் இருந்த 'ஆலன் பிளேட்ஸ்' என்பவருக்கு அப்போதுதான் அந்த தந்தி அவசர அவசரமாக லண்டனில் இருந்து வந்து சேர்ந்தது. தந்தி சொன்ன விஷயம் என்ன தெரியுமா?

"கப்பலில் நாடு திரும்பும் லீ குவான் யூவும் கோ கெங் சுவீயும் மிகவும் ஆபத்தானவர்கள். கரையில் இறங்கியவுடன் முதலில் அவர்களைக் கைது செய்து சிறையில் அடையுங்கள் அல்லது நாடுகடத்துங்கள்!"-- இது எப்படி இருக்கிறது

No comments: