Thursday 12 March 2015

பெருந்தலைவர்-தொலைநோக்கர்

காமராஜரின் ஆட்சியில் தமிழ் நாட்டில் மேற்கொள்ளப்பட்ட திட்ட முன்னுரிமை வரிசையானது, நாட்டின் பிற மாநிலங்களில் இருந்து மாறுபட்டது.

பிற மாநிலங்கள்:
திட்ட ஒதுக்கீடை பொறுத்தவரை - விவசாயம்/நீர்பாசனம் 41%, சம்தாய நலனிற்கு 27%, மின்சாரத்திற்கு 4% ஒதுக்கப்பட்டது.

தமிழ்நாடு:
திட்ட ஒதுகீடு - மின் வளர்ச்சிக்கு 40%, விவ்சாயம்/நீர்பாசனம் 29%, சமுதாய நலனுக்கு 22%, தொழிற்சாலைக்கு 5%, போக்குவரத்திற்கு 4%.

புதிய முறை விவசாயத்திற்க்கும், தொழில் வளர்ச்சிக்கும் மட்டுமின்றி, சமுதாயதின் பிற தேவைகளுக்கும் மின்சாரம் இன்றியமையாத ஒன்றாக இருந்தது. எனவே, மின்சார திட்ட செலவினங்களுக்கு முன்னுனிமை அளிக்கப்பட்டது.

சமுதாய நலப்பணிகளில் பெரும்பாலான திட்டங்களை மக்கள் பங்கேற்போடு செய்ய திட்டமிட்டதால், பிற மாநிலங்களை விட சமுதாய பணிகளுக்கு குறைந்த அளவிலேயே திட்ட ஒதுக்கீடு செய்யப்பட்டது.

மின் திட்ட முன்னுரிமை காரணமாகத்தான், மின் வளர்ச்சியில் இந்தியாவிலேயே முதலிடத்தையும், தொழில் வளர்ச்சியில் இந்தியாவிலேயே இரண்டாவது இடத்தையும் தமிழகம் எட்டுவதற்கு காரணமாக இருந்தது.

இதுவும் படிக்காத முதல்வர் காமராஜரின் தொலை நோக்கு பார்வையுடன் கூடிய திட்டமிடும் திறனுக்கு ஒரு சான்று.

No comments: