Tuesday 10 March 2015

பெருந்தலைவர் - ஊக்கமது கைவிடேல்

நெய்வேலி நிலக்கரி சுரங்கம் அமைப்பதற்க்குத் தேவையான கனரக எந்திரங்கள் சோவியத் நாட்டிலிருந்து வரவிருந்தன. அந்த எந்திரங்களை சென்னை துறைமுகத்திலிருந்து நெய்வேலிக்கு எப்படி எடுத்து செல்வது என்பதில் பெரிய சிக்கல் ஏற்பட்டது. சென்னையில் இருந்து சாலை வழியாக எப்படி எடுத்து செல்ல முடியும்? மிகவும் பளுவான் எந்திரங்கள் அவை. வழியில் உள்ள பாலங்கள் அவற்றை எடுத்துச் செல்ல ஏற்றவைதானா? என்பதுதான் சிக்கல். இந்தச் சிக்கல் ஓராண்டு காலத்துக்குமேல் தீர்க்க முடியாததாகவே இருந்து வந்தது. அப்போது மத்திய அரசில் வர்த்தக அமைச்சராக டி.டி.கிருஷ்னமாசசாரியும், சென்னை மாநிலத்தில் தொழில் அமைச்சராக ஆர். வெங்கட்ராமனும் இருந்தனர்.

இந்த சிக்கலை ஒரு முடிவுக்கு கொண்டுவர தொழில் அமைச்சர் ஆர்.வெங்கட்ராமன் கூட்டிய ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுப்பணித் துறையினரும் பிறரும், சென்னைத் துறைமுகத்திலிருந்து எந்திரங்களை நெய்வேலிக்கு கொண்டு செல்வதில் ஏற்படக்கூடிய பிரச்சனைகள் குறித்துப் பெரும் ஐயப்பாடுகளை எழுப்பிய வண்ணம் இருந்தனர். இடையில், கடலூர் துறைமுகத்துக்கு அந்த இயந்திரங்களை கொண்டுசென்று, அங்கிருந்து நெய்வேலிக்கு எடுத்து செல்ல முடியுமா என்றும் ஆலோசித்தனர். கடலூர் துறைமுகத்தில் கரையிலிருந்து நெடுந்தொலைவில் கப்பலை நிறுத்திவிட்டு, எந்திரங்களை இறக்கி வர இயலாது என்று முடிவுசெய்யப்பட்டு அந்த முயற்சி கைவிடப்பட்டது.

மத்திய வர்தக துறை அமைச்சரோ "இதை விரைவில் முடிவு செய்யுங்கள்" என்று அடிக்கடி வலியுறுத்திக் கொண்டிருந்தார். இது முதலமைச்சர் காமராஜர் கவனத்திற்க்கு கொண்டு செல்லப்பட்டது. காமராஜ் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்ய சொன்னார். டி.டி.கே-யும் வந்து கலந்து பேசுவதாக் தெரிவித்தார். டி.டி.கே வருவதற்க்கு முன்பாகவே இக்கூட்டத்திற்க்கு ஏற்பாடு செய்யப்பட்டது. " முடிந்தால் நாம் செய்வோம், முடியாவிட்டால், வேறு எந்த மாநிலதுக்கு பயன்படுமோ, அந்த மாநிலத்திற்க்கு எந்திரங்களை அனுப்ப சொல்லி விடுவோம்" என்ற முடிவுடந்தான் முதலமைச்சர் காமராஜர் கூட்டத்திற்க்கு வந்தார். கூட்டம் தொடங்கியது. " ஏன் சோவியத் நாட்டு எந்திரங்களை நமது சாலை வழியாக எடுத்து செல்ல முடியாது என்பதை எஞ்சினியர்கள் காமராஜரிடம் விளக்க முயன்றார்கள்.

நிதானமாக கேட்டு முடித்த காமராஜர், "அவைகளை எப்படி எடுத்து செல்ல முடியும் என்பதற்கான யோசனைகளை சொல்லுங்க ... நம்ம எஞ்சினியர்களுக்கு இல்லாத திறமை வேறு யாரிடம், எங்கே இருக்கு? நாமதான், நம்மைவிட மற்றவர்களைக் கெட்டிக்காரர்கள் என்று நினைச்சு ஏமாந்துகிட்டுருக்கோம். நம்ம எஞ்சினியர்கள் நினைத்தால் எதையும் சாதிப்பாங்க... இப்ப என்ன செஞ்சா, அந்த எந்திரங்களை நெய்வேலிக்கு கொண்டுசெல்ல முடியும்ணு சொல்லுங்க" என்றார்.

ஒருவர் எழுந்து நெய்வேலிக்கு செல்லும் சாலையில் அமைந்துள்ள பாலங்களை வலுப்படுத்த என்னென்ன செய்ய வேண்டுமென்று விளக்க முய்ன்றார். மற்றொருவர், " நான்கு நாட்கள் டயம் கொடுங்க, எல்லாவற்றையும் விவரமாகத் தருகிறோம்" என்றார். முதலைமச்சர் காமராஜர் " நான்கு நாள் என்ன? பதினைந்து நாள் எடுத்துக்குங்க! இவ்வ்ளவு நாள் காத்திருக்கலியா? நான் டி.டி.கே-யை இரண்டு வாரம் கழிச்சே வரச்சொல்றேன். அதற்குள் தயார் பண்ணி கொடுங்க்க" என்று சொன்னார்.

காமராஜர் சொன்ன மாதிரியே திட்டம் தயாரிக்கப்பட்டு, நெய்வேலி வரை பாலங்கள் வ்லுப்படுத்தப்பட்டுச் சாலைகள் அகலப்படுத்தப்பட்டன. நம்மவர் இசைவு கொடுத்த பிறகு, சோவியத் நாட்டிலிருந்து எந்திரங்கள் எடுத்து வரப்பட்டு, நெய்வேலிக்கு கொண்டு செல்லப்பட்டன. ஓராண்டு காலமாக தீர்வு காண முடியாமல் இருந்ததை எளிமையாக தீர்த்து வைத்தார் முதலமைச்சர் காமராஜர்.

No comments: