Wednesday 18 March 2015

தமிழகத் தமிழனின் இன்றைய வாழ்வாதாரமும் பொருளாதாரமும்!!

சமீபத்தில் தமிழகத்தில்  பொள்ளாச்சி அருகில் திருமணமான இளம்பெண் ஒருவர் வாங்கிய இருநூறு ரூபாய் கைமாற்றை திருப்பி குடுக்காத்தால் பணம் குடுத்தவரால் அவமானப்படுத்தப் பட்டுள்ளார். அவமானப் படுத்தப் பட்ட பெண் த்ற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தியை எத்தனை பேர் படித்திருப்பீர்கள் என தெரியவில்லை! படித்த எனக்கு மனம் மிகவும் வேதனைக்குள்ளானது! #கைமாற்று என்பது ஒன்றும் நமக்கு புதிதான விசயமோ இல்லை த்ற்கொலை பண்ணும் அளவுக்கு மிக மோசமான விசயமோ இல்லைதான். ஆனால் கைமாற்று என்பது மிகக் குறுகிய கால கடன் தான். அது பணமாகவும் இருக்கலாம் பொருளாகவும் இருக்கலாம்! இப்போது பிரச்சினை அது இல்லை 200 ரூபாய் கைமாற்றைக் கூட திரும்பத் தர முடியாத நிலையில் அந்த்ப் பெண் இருந்துள்ளார் என்பதே வேதனைக்குறியது. பண்த்தை திரும்பத் தரக்கூடாது என நினைக்கும் பெண்ணாக இருந்தால் தற்கொலை செய்து கொள்ள வேண்டிய அவசியமிருக்காது!



சமீப காலமாகவே தமிழகத்தில் நிலவும் பொருளாதார சிக்கல்கள் குறித்து யாரும் (அரசியல்வாதிகள்) கவலைப் பட்டதாகவே தெரியவில்லை! முன்னெல்லாம் கைமாற்று குடுப்பவர்தான் யோசிக்க வேண்டிய அளவில் பொருளாதாரம் இருந்தது. ஆனால் இப்பொழுது உள்ள சூழ்நிலையில் கைமாற்ற வாங்கவே யோசிக்க வேண்டிய அளவில் பொருளாதாரம் உள்ளது! (திருப்பி குடுக்கக் கூடாது என்று நினைப்பவர்களை இந்த பதிவில் சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை!) நான் பார்த்த வரையில் சில்லறை வணிகம் (Retail) 2013 மற்றும் 2014ளில் மிகவும் பாதிக்கப் பட்டுள்ளது. 2015ல் அதே நிலை தொடரவும் செய்கிறது! சில்லறை கடைகளிலும் விசாரித்த வரையில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையோ அவர்களின் வரவோ (Customer Flow and Walk Ins) குறையவில்லை. ஆனால் வாடிக்கையாளர்களின் வாங்கும் திறன் (Buying Capacity) மிகவும் குறைந்துள்ளது. மக்களின் வாங்கும் திறன் குறைந்தால் அதற்கான பாதிப்பு மிகக் கடுமையாக இருக்கும். மற்ற மாநிலங்களை ஒப்பிட்ட அளவில் தமிழகத்தின் வாங்கும் திறன் வெளிநாடு வாழ் இந்தியர்களை சார்ந்த வகையில் என்பது மிகவும் குறைவு. தமிழகத்தில் என்றும் விவசாயம், வணிகம், உள்நாட்டு உற்பத்தி போன்றவற்றை சார்ந்தே வாங்கும் திறன் உள்ள்து!! விவசாயத்தை குழி தோன்டி புதைத்து பல வருடங்கள் ஆகிவிட்டன. உள்நாட்டு உற்பத்தியை மிண் தட்டுப்பாடு என்ற பெயரில் முடித்தாகி விட்டது! வணிகத்திற்கு, தொழிற்சாலைகளுக்கும் திறமையான தொழிலாளர் கிடையாது!!

 பொருளாதாரம் என்பது மத்திய அரசுகளின் கொள்கை சார்ந்த நடவடிக்கைகளை சார்ந்ததுதான் என்றாலும், நமது மாநில ஆளும் கட்சிகள் சமீக காலமாக நிலைமையை மேலும் மோசமாக்கி வைத்துள்ளன என்பதே உண்மை! சமீப காலமாக இங்கு திறமையான தொழிலாளர்களை (Skilled Labours) உருவாக்குவதில் மிகப் பெரிய தேக்க நிலையை அடைந்துள்ளோம். இது சார்ந்த தொழலாலர்களை நாம் வெளி மாநிலங்களிலிருந்து தரவைத்துக் கொண்டிருக்கிறோம். இத்தனைக்கும் 20 ஆண்டுகளுக்கு முன் சில நூறுகளாக இருந்து ஐ.டி.ஐ (I.T.I) களும் இப்போது பல ஆயிரங்களாகி விட்டன!! மக்களுக்கு இலவசக் கல்வி சரி, ஆனால் அரிசி பருப்பு உடுக்க ஆடை என எல்லாவற்றையும் இலவசமாக் குடுத்து அவர்களை ஆற்றல் அற்றவராக்கி விட்டோம். வணிகம் செய்து கொண்டிருந்து பேரினங்களும் இன்று சொகுசான தகவல் தொடர்பு (I.T) சம்பந்தமான வேலைகளில் கவணம் செலுத்த ஆரம்பித்த விட்டனர். இவர்களுக்கெல்லாம் ஏதோ வெளிநாட்டு மற்றும் வெளிமாநில கம்பெணிகளின் பணத்தை இங்கு கொண்டு வருவதாக நினைப்பு. ஆனால் இவர்கள் மனித ஆற்றலை வெளிநாட்டுக்காரனும் வெளி மாநிலத்துக்காரரும் சுரன்டுகிறார்கள் என்பதுதான் இவர்கள் இது வரை உணராத உண்மை!

இப்போது இவர்கள் சேமிக்கும் கொஞ்சநஞ்ச பணத்தையும் இ-பே, ஸ்னாப் டீல், ஃப்லிப் கார்ட் என வெளிநாட்டு நிருவனங்கள் வரி கட்டாமலேயே கொள்ளை அடிக்க ஆரம்பித்துவிட்டன. மீதம் இருக்கும் பணத்தை மாநில அரசு #டாஸ்மாக் என்ற பெயரில் ஆட்டையை போட்டு விடுகிறது! இது குறித்தெல்லாம் போராட தேசிய கட்சிகளுக்கு நேரமில்லை! அவர்களுக்கு கோவிலை காப்பாற்றவும், மசூதிகளையும், தேவாலையங்களையும் இடிக்கவே நேரம் போதவில்லை! மாநில கட்சிகளுக்கு அவரவர் குடும்ப பிரச்சினைகளையும் வழக்குகளையும் சந்திக்கவே நேரம் போதவில்லை! ஈழத்தமிழர்கள் குறித்து கவலைப்படும் நாம் தமிழர், ம.தி.மு.க போன்ற கட்சிகள் என்று தமிழக தமிழர்கள் குறித்து கவலைப்படப் போகின்றன என தெரியவில்லை! ஏற்கனவே கூறியுள்ளேன் மீண்டும் கூறுகிறேன் நாம் தமிழர் போன்ற தமிழ் தேசியம் பேசும் கட்சிகளே நீங்கள் களமாடுவதும் அரசியல் செய்வதும் தமிழகத்தில் தான். முதலில் எங்கள் நலன் சார்ந்து போராடுங்கள். ஈழத் தமிழர்களுக்காக உங்களுக்குத் தோளோடு தோள் நின்று நாங்கள் போராடுவோம். எங்களுக்கே கஞ்சிக்கு வழி இல்லாத போது நாங்கள் எங்கு பிறருக்கு கஞ்சி ஊற்றுவது. புரிந்தால் தேறுவீர்கள். இல்லையேல் அது வரை திராவிட கட்சிகள்தான் இங்கு நிலைத்திருக்கும்.

தமிழக தமிழனின் பொருளாதாரமும் வாழ்வாதாரமுமே மற்ற எல்லா உலக வாழ் த்மிழரின் அஸ்திவாரம். பில்டிங் ஸ்ட்ராங்கா இருந்து பேஸ்மென்ட் வீக்கா இருந்தா அது வடிவேல் கதை தான்!!

No comments: