Wednesday 25 March 2015

என்னை கவர்ந்த பாடல் வரிகள் - எத்தனைக் காலந்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே

எத்தனை காலங்கள் எத்தனை யுகங்கள் கடந்தாலும் இந்த பாடலின் சத்திய வரிகள் அந்த சூழலுக்கு பொருந்தும்! தஞ்சை ராமையாதாஸ் இயற்றி, புரட்சி நடிகர் எம்.ஜி.ஆருக்காக (மருதூர் கோபாலமேனன் இராமச்சந்திரன்) மலைக்கள்ளன் (1954) திரைப்படத்தில் டி.எம்.சௌந்தரராஜன் பாடிய ஒரு கருத்தான பாடல். யுட்யூபில் பார்த்தும், கேட்டும் மகிழலாம். பாமரன், படித்தவன், தொழிலாளி, முதலாளி, ஏழை, பணக்காரன், பொதுசனம், அரசு அதிகாரி, வாக்காளன், அரசியல்வாதி என அனைவருக்குமே பொருத்தமாய் அறிவுறைக்கும் பாடல்.... என்னை கவர்ந்த பாடல் வரிகள்...





எத்தனைக் காலந்தான் ஏமாற்றுவார் 
இந்த நாட்டிலே - இன்னும் 

எத்தனைக் காலந்தான் ஏமாற்றுவார் 
இந்த நாட்டிலே சொந்த நாட்டிலே நம் நாட்டிலே 

சத்தியம் தவறாத உத்தமன் போலவே நடிக்கிறார் (2) 
சமயம் பார்த்துப் பல வகையிலும் கொள்ளை அடிக்கிறார் (2) 

பக்தனைப் போலவே பகல் வேஷம் காட்டி 
பாமர மக்களை வலையினில் மாட்டி


எத்தனைக் காலந்தான் ஏமாற்றுவார் 
இந்த நாட்டிலே


தெருவெங்கும் பள்ளிகள் கட்டுவோம் (2) - 
கல்வி தெரியாத பேர்களே இல்லாமல் செய்வோம் (2) 

கருத்தாகப் பலதொழில் பயிலுவோம் (2) - 
ஊரில் கஞ்சிக்கில்லை என்ற சொல்லினைப் போக்குவோம் (2) 

எத்தனைக் காலந்தான் ஏமாற்றுவார் 
இந்த நாட்டிலே

ஆளுக்கொரு வீடு கட்டுவோம் (2) - 
அதில்ஆன கலைகளை சீராகப் பயில்வோம் (2) 

கேளிக்கையாகவே நாளினைப் போக்கிட 
கேள்வியும் ஞானமும் ஒன்றாகப் திரட்டுவோம் 


இன்னும் எத்தனைக் காலந்தான் ஏமாற்றுவார் 
இந்த நாட்டிலே

No comments: