Friday 20 March 2015

உலக சிட்டுக்குருவிகள் தினம்

மெல்ல மெல்ல அழிந்து வரும் சிட்டுக்குருவியின் எண்ணிக்கை விவசாய நாடான இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதுமே குறைந்து வருகிறது. சிட்டுக்குருவி இனத்தின் அழிவைப் பற்றி - நகரங்களில் கிட்டத்தட்ட இல்லை என்ற நிலையே உருவாகி விட்டது - பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் 2010-ம் ஆண்டு முதல் மார்ச் 20-ம் தேதி, ’உலக சிட்டுக்குருவிகள் தினம்’-ஆகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.


சிட்டுக்குருவி இனத்தைக் காத்து முன் போல மீண்டும் வானில் வட்டமிட வைக்க விட பல முயற்சிகள் நடந்து வருகிறது. 2012ம் ஆண்டு தில்லி அரசு சிட்டுக்குருவியை மாநிலப் பறவையாக 2012 அக்டோபர் மாதம் அறிவித்தது.




சிட்டுக்குருவியின் மொத்த வாழ்நாள் 13 ஆண்டு. இந்த குருவிகள் வனப்பகுதிகளில் வாழ்வதைவிட, மனிதர்களுடன் நெருங்கி இருக் கவே விரும்புகின்றன. செல்போன் கோபுரம் கதிர்வீச்சால் குருவிகள் அழிந்து வருவதாக கூறுவது உண்மையல்ல என்று ஆராய்ச்சி யாளர்கள் கூறுகின்றனர். குருவி கள் வாழ்வதற்கான இருப்பிடம் இல்லாமல் போனதும், வயல்வெளி களில் பயிர்களுக்கு ரசாயனம் தெளிப்பு அதிகரிப்புமே காரணம். குருவிகள் முட்டை இடுவதற்காகவே கூட்டை தேடுகிறது.


சிட்டுக்குருவிகள் பொதுவாக மக்கள் வசிக்கும் பகுதிகளிலேயே வீட்டு மாடம்பரண்,ஓடுகளின் இடைவெளி போன்ற இடங்களில் கூடுகட்டி வாழ விரும்புகின்றன. தற்போது, கான்கிரீட் மற்றும் அடுக்குமாடிக் குடியிருப்புகள் அதிகரிப்பால் இன்று நகரங்களில் இருந்து வெளியேறி விட்டன. செல்போன் அலைவரிசை கோபுரங்கள் சிட்டுக் குருவிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்துவதாகவும் கருத்து நிலவுகிறது. குருவிகளின் உணவான கம்புவரகுசோளம்தினைசாமை போன்றச் சிறுதானியங்களின் பயன்பாடு குறைந்துவிட்டதும்தானியப் பயிரிடுதலில் பூச்சிக்கொல்லி மருந்துகளின் உபயோகம் அதிகரித்ததும் கூட முக்கியக் காரணங்களாகக் கூறப்படுகிறது. செல்போன் டவர்களின் பாதிப்புகளை விட இத்தகைய காரணங்களே சிட்டுக்குருவிகளின் அழிவுக்குக் காரணமாக இருக்கலாம்.


குருவிகள் தானியங்கள் மற்றும் சாக்கடையில் உள்ள புழுக்களை விரும்பி உண்ணுகின்றன. வீடுகளில் இந்த குருவிகள் வசித்தால், குடும்பம் ஆலமரம் போல் விருத்தியடையும் என்ற நம்பிக்கை உள்ளது. இதனால் கிராம மக்களும் குருவி வளர்ப்பில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.


2013ல் அன்றைய தில்லி முதல்வர் ஷீலா தீக்ஷித் பள்ளிக் குழந்தைகளுக்கு பள்ளிகளில் வைக்க பிரத்யேகமாக வடிவமைக்கப் பட்டக் கூடுகளை (கம்பங்களில் மேல் வைக்கப்படும் வகையில்) கொடுத்து இருக்கிறார். இவை 2000 தனியார் பள்ளிகளில் வைத்துக் கண்காணிக்கப்படும். தவிர, தில்லியில் 170 குருவிக் கண்காணிப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன (இந்தியாவிலேயே தில்லி நகரில் தான் இதன் எண்ணிக்கை அதிகம்).


உலக அளவில் அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியா மற்றும் ஆப்ரிக்கா கண்டங்களில் சிட்டுக்குருவிகள் அதிகளவில் இருந்தன. தற்போது உலக அளவில் அழிந்துவரும் அரிய வகை பறவை இனங்களில் சிட்டுக்குருவியும் உள்ளது. பொது வாக மனிதர்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளிலும், வயல்வெளிகளிலும் சிட்டுகுருவி கள் காணப்படுகின்றன. நகரங்களைபோல் கிராமப்புறங்களில் தொழிற்சாலைகள் அதிகரிப்பு, விளைநிலங்கள் வீட்டு மனைகளாக் கப்பட்ட காரணத்தால் சிட்டுக்குருவிகளுக்கான வாழ்விடம், இரை தேடுமிடங்கள் சுருங்கிவிட்டன.


உலக அளவில் அழிந்துவரும் அரிய வகை பறவை இனங்களில் சிட்டுக்குருவியும் சேர்ந்துள்ளது. சிட்டுக்குருவிகளைக் காக்க கிருஷ்ணகிரியில் நூதன முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இங்கு 100 கிராமங்களில் வீடுகள் தோறும் சிட்டுக்குருவிகள் வளர்க் கப்படுகின்றன. எங்கு பார்த்தாலும் சிட்டுக்குருவிகள்தான், எங்கு திரும்பி னாலும் கீச்.. கீச்.. சப்தம்தான். என்ன ஆச்சரியமாக உள்ளதா.. அத்தனையும் உண்மை.


கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் செயல்படும் டிவிஎஸ் நிறுவனத்தின், சீனிவாசன் அறக்கட்டளை இதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளது. ஓசூர், தளி மற்றும் கர்நாடக மாநில எல்லையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 100 கிராமங்களில் ஒவ்வொரு வீட்டிலும் சிட்டுக்குருவிகள் வளர்க்க தனித்தனியாக கூடுகள் வழங்கி கிராம மக்களை ஊக்கப்படுத்தி வருகின்றனர். குருவிகள் மனிதர் களோடு இணைந்து ஆனந்தமாக வாழ்கின்றன.


‘கீச் கீச்' என்று கத்திக் கொண்டு தானியங்களைக் கொத்தித் தின்றபடி, சட்டென்று சிறகடித்து பறக்கும் அதன் அழகைக் காண, கண்கள் கோடி வேண்டும். இன்றைய இளைய தலைமுறையினருக்கு அந்த வாய்ப்புகள் குறைவே.


இதுகுறித்து சீனிவாசன் அறக் கட்டளை களப் பணியாளர் துரையன் கூறியதாவது: ஓசூர் வட்டத்தில் கும்மளாபுரம், கொத்தகொண்டப் பள்ளி, முத்தூர், தளி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள மொத்தம் 236 கிராமங்களில் அட்டை கூடுகள் வைக்க திட்டமிட்டுள்ளோம். தற்போது 80 கிராமங்களில் வைக்கப்பட்டுள்ளன. கர்நாடக மாநிலம் ஆனைக்கல் பகுதியில் 44 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டு 20 கிராமங்களில் சிட்டுக்குருவி கூடு வைக்கப்பட்டுள்ளது. 100 கிராமங் களில் மொத்தம் 10 ஆயிரம் வீடுகளில் குருவிகள் தங்குவதற்கான அட்டை கூடுகள் வைக்கப்பட்டுள்ளன.


சிட்டுக்குருவிகளை அழிந்துவரும் பறவை இனங்களில் ஒன்றாக அரசு வகைப்படுத்தி உள்ளது. சிட்டுக்குருவிகளைப் பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், கிராம மக்கள், பள்ளி குழந்தைகள் மத்தியில் சிட்டுக்குருவி களை வளர்க்கும் பழக்கத்தை ஊக்கப்படுத்தி சிட்டுக்குருவி இனத்தைப் பெருக்கி வருகிறோம் என்று அவர் தெரிவித்தார்.


வளர்க்கும் முறை
**********************
ஒரு சிறிய அட்டைப் பெட்டியில் வைக்கோலை அடைத்து, வீட்டு வராந்தாவிலோ, பால்கனியிலோ, மரத்திலோ தொங்கவிடலாம். இந்தப் பறவையின் குளியலுக்காக வீட்டுக்குள் ஒரு சிறிய கிண்ணத்தில் நீர் வைக்கும் பட்சத்தில் குருவிகள் தானாகவே கூட்டைத் தேடி வரும்.

நன்றி: தி இந்து
                தமிழ் மனம்

No comments: