Monday 16 March 2015

பெருந்தலைவர் - நிர்வாகம்

காமராஜரின் நிர்வாக திறமை பற்றியும், அவர் பிரச்சனைகளை அணுகும்முறை பற்றி, அவர் கீழ் பணியாற்றிய தலைமை செயலாளர் டபிள்யூ. ஆர். எஸ். சத்தியநாதன் கூறியுள்ளதை கீழ் காணலாம்.

" சென்னை அரசாங்கத்தின் தலைமைச் செயலாளராகக் காமராஜர் ஆட்சிக் காலத்தில் ஐந்தாண்டுகள் மகிழ்ச்சியுடன் பணியாற்றினேன். நான் அவர் முன் எவ்வளவு பெரிய பிரச்சினையை வைத்தாலும், அது எத்தனை சிக்கல் வாய்ந்ததாக இருப்பினும் ஒரு நொடியில் முடிவுக்கு வந்து விடுவார். பிரச்சினைகளை அவர் அனுகும் முறை நேராடியாக இருக்கும். அவருடைய தீர்ப்பு மிகத் தெளிவாக இருக்கும். நாங்கள் வார்த்தை சிலம்பமாடி வாக்குவாதத்தில் ஈடுபட்டதே கிடையாது. எதையும் விளக்கிச் சொல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டதே இல்லை. வியக்கத்தக்க வேகத்தில் பிரச்சனையைக் கண்டுபிடித்து விடுவார். அதே போல் தம்மிடம் பிரச்சனைகளைச் சொல்ல வருபவர்களுடைய குணத்தை மின்னல் வேகத்தில் எடை போட்டு விடுவார். அவருடைய ஆலோசனைக்கு நான் எழுதி வைக்கும் பைல் முழுவதையும் மிகக் கவனமாக படிப்பார். நன்றாக ஐயமறப் புரிந்துகொள்வார். அதன் பின்பே தீர்மானிப்பார்" என்று பெருமிதத்தோடு கூறியுள்ளது உற்று நோக்கத்தக்க தாகும்.

No comments: