Tuesday 3 March 2015

சான்றோர்கள் - பலம் பலவீனம்

கிரேட் வொயிட் ஷார்க் (Great White Shark) எனப்படும் பெரிய வெள்ளை சுறாக்கள் அகோர பசியும் பயங்கர ஆக்ரோஷமும் கொண்டவை! இவைகள் தங்கள் தாயின் கருப்பையில் இருக்கும் போதே போட்டியிட்டு சன்டையிட்டுக் கொள்ள ஆரம்பிக்கின்றன. வலிய குட்டி எஞ்சிய குட்டிகளை கருப்பையிலேயே கொன்று தின்றுவிடும்! ஆனால் இவை மிகச் சிறந்த வேட்டையாளி மட்டுமல்ல சூழலுக்கு தக்க வாழ்ந்து உணவுச் சங்கிலியில் தங்களை எப்பொழுதும் முதலிடத்தில் வைத்துக் கொள்பவை!!




சமுதாயங்களிலேயே அதிக சங்கங்களை கொண்டதும், மதத்தால் அதிக கருத்து வேற்றுமை கொண்டிருப்பதும் நாடார் சமுதாயமாகவே இருக்கும்! இது இன்று நேற்று அல்ல நூற்றாண்டு காலமாகவே உள்ள விசயம்தான். ஊர்ப் பேராலும் மதத்தின் பேராலும் பிளவு பட்டிருந்த நாடார் சமுதாயம் இன்று சங்கங்களாலும் பிளவு பட்டிருக்கின்றன! பல வேற்றுமைகளுக்கு இடையேதான் நாடார் சமுதாயம் வெற்றி கண்டிருக்கிறது!!  சில நூற்றான்டுகளுக்கு முன் வரை நாடார் சமுதாயம் பல போராட்டங்களை சந்திக்க வேண்டியிருந்தது. வடுக பாளையக்காரர்கள் இதில் முத்ன்மையானவர்கள். இவர்கள் ஆட்சியிலும் சரி, வெள்ளையர்கள் ஆட்சியிலும் சரி வடுக பாளையக்காரர்கள் நாடார்களுக்கு இழைத்த துன்பங்களும், கொடுமைகளும் கொஞ்ச நஞ்சமல்ல!! வடுக கொள்ளையனான கெட்டி பொம்மு நாயக்கன் (அதாங்க கட்ட பொம்மன் - இவன் பெயருக்கும் பாண்டிய என்பதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை!) தூக்கில் தொங்க விடப் பட்ட அன்று நாடார் மக்கள் அதை திருவிழாவாக கொண்டாடினார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

அதன் பிறகு ஆரிய பிராமினர்கள், நம்பூதிரிகள், வெள்ளாளர்கள் கூட்டு சதி. சமீன்தார்களின் வஞ்சகம், தேவமார்களின் பொறாமை என நாடார் சமுதாயம் பல இன்னல்களை கடந்தே வந்தது. அப்பொழுதெல்லாம் ஒருங்கிணைப்பு மிக மிக அவசியமாக இருந்தது. கருத்து வேறுபடுகள் இருந்தாலும் ஒருங்கினைப்பு சாதிய ரீதியில் பலமாகவே இருந்தது! ஒரு கட்டத்தில் மகமை, கிறித்துவ மிஷனரிகள் என கல்வியிலும் வியாபாரத்திலும் நாடார்கள் மள் மளவென வளரத் தொடங்கினர். பிற சமுதாயத்தினரின் இழிவுப் பேச்சுக்களையும், மன ரீதியான தாக்குதல்களையும் உதாசீனப்படுத்தி விட்டு மகமை, சங்கங்கள் என ஒருமைப்பாடுடன் வளரத் தொடங்கினர். மதம் பெரிய பிரச்சினையாக நாடார்களுக்குள் வளரத் தேவையில்லாமல் போனது. காரணம் சுய மரியாதை திருமணங்களை முதலில் முழு மூச்சுடன் ஆரம்பித்து இன்று வரை தொடர்ந்து வருவது நாடார் சமுதாயத்தில் மட்டுமே! இந்து கிருத்துவ நாடார்கள் அனைவரும் கருத்தில் கொள்ள வேண்டிய விசயமிது. பெரும்பாலும் நாடார்கள் எந்த மதத்தினராக இருந்தாலும் தாலியை மஞ்சள் நானில் பூட்டி மூன்று முடிச்சி போடுவதில்லை! உண்மையான பிரச்சினை சமூகம் கல்வியிலும் பொருளாதாரத்திலும் வளர்ந்த பிறகுதான் தொடங்கியது.

 நாடார்கள் ஒரு கட்டத்தில் தன்னிறைவு பெற்ற பிறகு அவர்களுக்கு வெளியே போட்டியில்லாமல் போனது. ஆமாம் நாடார்கள் கொடி கட்டி பறந்த, பறக்கும் ஒவ்வொரு துறையிலும் நாடாருக்கு போட்டி நாடாராகவே இருந்தனர். பலசரக்கு, மளிகை, பாத்திர வியாபாரம், உற்பத்தி என எல்லாவற்றிலுமே! அதன் பிறகு ஒரு கட்டத்தில் தாங்கள் பதவி வகிக்கும் சங்கங்களையும் மகமைகளையும் கூட சிலர் தங்கள் வியாபார அபிவிருத்திக்காக சுயநலத்துடன் பயன் படுத்த தொடங்கினர். மசாலா பொடி உற்பத்தி, விற்பனை, பாத்திர தயாரிப்பு, விற்பனை, மல்லி ஏற்றுமதி, பலசரக்கு பொருட்கள், சமையல் என்ணை, பலசரக்கு ஏற்றுமதி என பல வியாபாரங்களில் கவணித்தால் தெரியும் போட்டி நாடார்களுக்குள்ளேயே இருக்கும். இதில் இன்னொரு விசயத்தையும் குறிப்பிட்டே ஆகவேண்டும். நாடார்களின் பலமும் அதுதான் பலவீனமும் அதுதான். அது என்ன தெரியுமா? ஒவ்வொரு நாடாரும் சுயம்பு என்பதே!!




ஆமாம் ஒவ்வொரு நாடாருமே பிற நாடாரின் உதவியோ சங்கங்களின் உதவியோ இல்லாமல் தன் சொந்த உழைப்பால் மட்டுமே முன்னுக்கு வந்தவராக இருப்பார். இது பலம். இதனால் எந்த நாடாரும் பிற சமூகத்தாரை மட்டுமல்ல தன் சொந்த சமூகத்தையே சாராமல் வாழத் தொடங்குறார். இது பலவீனம். ஆம் நாடார்களின் முன்னேற்றத்தற்கு இன்னொரு நாடாரின் அவசியம் இல்லாமல் போகிறது. இது ஒருங்கிணைப்பை தடுக்கிறது எனலாம். அவரவர் தங்கள் சொந்த நலன்களிலும், தன் வேலையில் மட்டுமே கவனத்தை கொள்ள ஆரம்பித்தனர். நாம் உழைத்தால் தான் முன்னுக்கு வரமுடியும் பிறரை நம்பக்கூடாது, நம்பவேண்டிய அவசியம் இல்லை என்பது நாடார்கள் மனதில் வெகுவாக வேரூன்றியது. இன்று வரை அதை அசைக்க முடியவில்லை!! தன் சமூகத்துடன் கூடிய தொழில் போட்டியால் பிற சமூகத்தாரை சகித்து போக முடிகின்ற நாடார்களால் தன் சமூகத்து போட்டியை சகித்துக் கொள்ள முடியவில்லை, ஏனென்றால் அது அவருக்கு இணையான போட்டியாக இருக்கும்.

தொழில், மதம், சுயநலம் எல்லாம் கடந்து நாடார் மக்களே சமூகம் என்ற ஒன்று இருக்கின்றது. சமூகம் இல்லையெனில் மக்கள் மாக்களாகி விடுவர். மீன்டும் பாளையக்காரர்கள், ஜமீந்தாரர்களின் தலையெடுப்பு தொடங்கியிருக்கிறது. இன்னொரு கலவரத்தை தமிழகம் தாங்காது. கலவரமாகும் முன்னரே நாம் ஒருங்கினைப்பை தொடங்கி விடுவோம் மதம், சங்கம் போன்ர பாகுபாடுகலை கடந்து. அது பிற சமூகங்களை ச்ந்திக்க வைக்கும். அதனால் நம் சமூகத்துக்கு மட்டுமில்லை பிற சமூகங்களுக்கு இழப்பை தவிர்க்கும்.

No comments: