Friday 13 March 2015

பெருந்தலைவர் - கூட்டுறவே நாட்டுயர்வு

1958 பஞ்சாயத்து சட்டம் மூலம் அதிகாரம் பரவலாக்கப் பட்டாலும், மக்களிடம் முதலீடு செய்யக்க் கூடிய சக்தி என்பது குறைந்தே இருந்தது. மாநில அரசிடம் போதிய நிதி வசதி இல்லை என்ற சூழ்நிலையில், அவர் அவர்களுக்கு இருக்கும் சக்திக்கு ஏற்ற அளவில் பங்கேற்று, கூட்டுறவு மூலம் உயர்வு காண்பது தமிழகத்திற்கு ஏற்றதாக இருக்குமென்று உணர்ந்திருந்தார் பெருந்தலைவர். எனவே காமராஜர் ஆட்சி பொறுப்பை ஏற்ற பின்பு, கூட்டுறவு சங்கங்களின் வளர்ச்சிக்கு அதிக முன்னுரிமை அளிக்கப்பட்டது. கூட்டுறவுச் சங்கங்களில் அரசும் குறிப்பிட்ட அளவு பங்குகளை ஏற்றுக்கொண்டு உறுதுணையாக இருந்தது. மாநிலத்தில் கூட்டுறவு சங்கங்கள் இல்லாத கிராமமே இல்லை என்ற நிலையை காமராஜர் ஆட்சி உருவாக்கியது. மக்களில் 84 விழுக்காட்டினர் கிராமக் கூட்டுறவு சங்கங்களில் பங்கேற்று இருந்தனர்.

11,366 சிக்கன கடன் கூட்டுறவு சங்கங்கள், 322 வேளாண்மை வங்கிகள், 22 கிராமபுற வங்கிகள், 102 தொடக்க நிலை அடமான வங்கிகள், 15 மத்திய கூட்டுறவு வழங்குதல் மற்றும் விற்பனை சங்கங்கள், 288 விவசாய சங்கங்கள், 1396 பால் உற்பத்தியாளர் சங்கங்கள், 275 வீடு கட்டும் சங்கஙகள், ஒரு கூட்டுறவு நகரியம், 1401 தொடக்கநிலை பொருள் சங்கங்கள், 14 கூட்டுறவு அச்சக சாலைகள், 7 சுகாதார கூட்டுறவு சங்கங்கள், 5 கூட்டுறவு லாண்டரிகள், 2 முடிதிருத்தும் சங்கங்கள் போன்ற கூட்டுறவு சங்கஙள் ஏற்படுத்தபட்டு செயல்பட்டு வந்தன. கிராமப்புற வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்ககூடிய வகையில், கிராம கூட்டுறவு வங்கிகளை ஏற்படுத்த திட்டமிட்டு, அதே ஆண்டில் 15 வங்கிளை காமராஜ் அரசு ஏற்படுத்தியது. 1963-ம் ஆண்டு மொத்தம் 19,164 கூட்டுறவு சங்கஙக்ள் தமிழகத்தில் செயல்பட்டு வந்தன. இதன் வழியாக, மனிதனின் எல்லா செயல்பாட்டுக்கும் சிந்தனைக்கும் ஏற்ப கூட்டுறவு சங்கங்கள் த்மிழகத்தில் இருந்தன.

கூட்டுறவே நாட்டுயர்வு என்பதை செயல்படுத்தியவர் கர்மவீரர்.

No comments: