Thursday 26 March 2015

பெருந்தலைவர் - தமிழகத்தின் சிற்பி

 பெருந்தலைவரை தமிழகத்தின் சிற்பி என நான் கண்டிப்பாக சொல்வேன். இன்றும் தமிழகம் அரசியல்வாதிகளால் கொத்தி எடுக்கப்பட்டும் குலைத்து போடப்பட்ட பின்னும் தொழில் வளர்ச்சியிலும், கல்வியிலும், சுகாதாரத்திலும் பிற மாநிலங்களை காட்டிலும் முன்னேறி நிற்கிறது என்றாள் அது பெரியவர் செதுக்கியதுதான். அதே போல் தொழில் முனைவோரையும் மக்களையும் அரசை சாராமல் முன்னேற கல்வி, உளகட்டுமானம் என எல்லாவற்றையும் தயார் செய்தே வைத்திருந்தார் தலைவர். அவர் மட்டும் முதல்வராக வரவில்லையென்றால் தமிழகம் இன்று பீகார், ஒரிசா மற்றும் கிழக்கு மாகானங்களை விட மிகவும் பின் தங்கியிருந்திருக்கும்!



 இனம், மொழி, சமயம் கடந்தது பெருந்தலைவரின் தேசப்பற்று! மக்கள் நலன், தேச நலன் என்று வரும் பொழுது தனது மொழி, தனது இனம், தனது சமயம் என்றெல்லாம் கர்ம வீரர் சிந்தித்ததே இல்லை! அதே போல் மனதில் பட்டதை வெளிப்படையாக சொல்லக் கூடியவராகவுமிருந்தார் அந்த வெள்ளை உள்ளம் படைத்த மாமேதை.

தமிழ் நாட்டு மக்களுக்கு ஒரு பழக்கமிக்கிறது, சபரிமலை அய்யப்பன் என்ற கேரள மாநிலக் கோயிலுக்கும், திருமலை வெங்கடேசப் பெருமாள் கோவிலுக்கும் தரும் முக்கியத்துவத்தை நமது தமிழகத் கோவில்களுக்கு தருவதில்லை.

இந்த பக்தி விசயம் தமிழகத்தை பொருளாதார ரீதியாகவும் பாதித்து வருகிற ஒரு விஷயம். திருப்பதி ஏழுமலையானின் உண்டியல் வருமானம், பழனி திருக்கோயில் பெரும் வருமானத்தைவிட பல நூறு கோடிகள் அதிகம். 
காமராஜர் காலத்திலும் இதே நிலைதானிருந்தது. திருமலைப் பிள்ளை வீதியில் வாழ்ந்த தலைவர் இதை எண்ணி ஆதங்கப்பட்டார். ஆன்மீகத் திருக் கூட்டம் தன் மீது வசை பொழிந்தாலும் பரவாயில்லை என்று ஒதுக்கிவிட்டு தன் மனதில் பட்டதை ஒளிவுமறைவின்றி பேசினார் " தமிழ் நாட்டு பக்தர்கள் மிக அதிக அளவில் காணிக்கையை திருப்பதி கோயில் உண்டியலில் கொண்டுபோய் செலுத்துகிறார்கள். நம் நாட்டு ஸ்ரீரங்கம் எந்த வகையிலும் திருப்பதிக்கு குறைந்தது கிடையாதே... உங்கள் காணிக்கையை ஸ்ரீரங்க உண்டியலில் போட்டால் தமிழ்நாட்டுக்கு பெரிய பயனாக இருக்கும். மக்களுக்கு செய்ய வேண்டிய நல்ல காரியங்களுக்குப் பயன்படும். நம்ம சாமியும் பெரிய சாமிதான்" என்பதே காமராஜின் வேண்டுகோள்.

No comments: