Monday 9 March 2015

தவறான இலக்காகும் பாங்காக்

தாய்லாந்தின் தலைநகரான பாங்காக் சுற்றுலா விரும்பிகளின் கண்கவர் நகரம் என்பதில் மாற்றமில்லை. பாங்காக் செல்ல விரும்பினால் பார்க்க வேண்டிய சில இடங்கள்!
1.பாங்காக் அரண்மனை
2.வாட் போ புத்த மடாலயம்
3.மிதக்கும் மார்க்கெட்
உலக நாடுகளில் சுற்றுலா கண்ணோட்டத்தில், "மாஸ்டர் கார்டு' அளவீடுகளின்படி மூன்றாவது சிறந்த நகரம் தாய்லாந்து நாட்டின் தலைநகரமான பாங்காக். லண்டன், பாரீஸ் நகரங்களுக்கு அடுத்த இடத்தை பாங்காக் பிடித்துள்ளது. அதேபோல், லண்டன், நியூயார்க் நகரங்களுக்கு அடுத்தபடியாக அதிகமான செலவுபிடிக்கும் நகரமும் பாங்காக்தான்.

 "தாய்லாந்து சென்று வந்தேன்' என்றால் "பட்டயா'வுக்குப் போனீர்களா? என்றுதான் முதலில் கேட்கிறார்கள். பட்டயா நகரத்தின் "இரவு வாழ்க்கை' அப்படி. விடுதிகள், மசாஜ் கிளப்புகள், கேளிக்கைக் கூடங்கள் மட்டுமின்றி தெருக்களில் கூட "செக்ஸ் வியாபாரம்' தாராளமாகி வருவதே அதற்குக் காரணம். பாங்காக்கிலும் இரவு 10 மணிக்கு மேல் அதுதான் நிலைமை.

இப்போது இந்தியாவில் உள்ள பெரு நிறுவனங்கள் தங்களது விற்பனையை அதிகரிக்க  #பாங்காக்கை யே பகடையாக உருட்டுகின்றன. எப்படி? சில்லறை மற்றும் மொத்த வியாபாரிகளுக்கு கொள்முதலில் மிகப் பெரிய அளவில் இலக்கை (Target) நிர்ணயிக்கின்றனர்! இலக்கை அடைபவரகளுக்கு குறைந்த பட்சம் இரண்டு இரவு அங்கே தங்க இலவசம்! தங்கவும் சாப்பிடவும் நிறுவணம் பார்த்துக் கொள்ளும் மற்றவற்றை வியாபாரி பார்த்துக் கொள்ள வேண்டும்! இளைஞர்கள் மற்றும் வாலிபர்களை முற்றிலுமாக கலாசார சீரழிவிற்கு உட்படுத்துகிறார்கள்!

சரி இதை எல்லாம் இங்கே வந்து ஏன்டா புலம்பறேன்னு கேக்குறீங்களா? மக்கா இதுல ரொம்ப பாதிக்கப் படுறது (?!) நம் சமூக இளைஞர்கள் மற்றும் வாலிபர்களே. சென்னை, கொங்கு மற்றும் தென் மாவட்டங்களே இந்த பெரு நிறுவனங்களின் குறி. இங்கு பெரும்பாலும் சில்லறை வணிகங்களில் ஈடுபடுவது நம் சமூகமே. ஆரம்பத்தில் எளிய இலக்குகளை குடுத்து நம் சமூக இளைஞர்களை  ருசி கண்ட பூனையாக்குகி்னறனர். பெரும்பாலும் #குக்கர் #மிக்சி #கிரைண்டர் போன்றவற்றை தயாரிக்கும் பெரு நிறுவனங்களே இது போன்ற கீழ்த் தரமான செய்கைகளில் இறங்குகின்றன.

இவர்கள் நேரடியாக வணிகர்களை அங்கு அழைத்துச் செல்வது இல்லை! போக்குவரத்து, உண்ணும் செலவு, தங்குமிட செலவுகளை மட்டும் இவர்கள் பார்த்துக் கொள்கிறார்கள். மீதியை பாங்காக் பார்த்துக் கொள்கிறது! ஆரம்பத்தில் இலக்கை எட்டி வி்ட்டு செல்லும் நம் வியாபாரிகள், ருசி கண்ட காரணத்தால் அந்த பொருள் கையிருப்பில் இருக்கும் போதே மேற்கொண்டு வாங்கி பணமுடக்கத்தில் மாட்டி கடனி்ல் சிக்குகிறார்கள். சில விவரமான இளைஞர்கள் அதற்கு பேசாமல் கைக் காசை செலவளித்து போய் வந்து விடுகிறார்கள்-ருசி கண்ட பூனைகள்!

திருப்பதி போகிறேன் என்று வீட்டில் கூறி விட்டு பாங்காக் சென்று வந்தவர்களும் உண்டு! நம் சமூக பெரியவர்களும் வியாபார சங்கங்களும் கொஞ்சம் இதில் கவணம் செலுத்த வேண்டும். கல்யாண ஆன ஆகாத இளைஞர்கள் அனைவருமே இந்த சிலந்தி வலையில் சிக்கி மீள முடியாமல் தவிக்கிறார்கள். சில்லறை வணிகத்தில் ஈடுபட்டுள்ள நம் சமூக பெற்றோ்களும் கொஞ்சம் கவணமாய் இருத்தல் நலம். விசயம் ரொம்ப அவசரமே!!

No comments: